சத்து மாவு இடியாப்பம்
தேவையானவை:
சத்து மாவு – ஒரு கப்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சத்து மாவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும். இதனுடன் எண்ணெய், உப்பு, வெந்நீர் விட்டு இடியாப்ப மாவு போல பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
இதனை, தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவோ அல்லது வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து காரமாகவோ சாப்பிடலாம். ஹெல்தியான இந்த இடியாப்பம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.