இப்ப சீசன் உடனே வாங்கி செஞ்சுடுங்க! சர்க்கரை வள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
chakkara valli kizhanku - 2026

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை

தேவையானவை:
மைதா மாவு – ஒரு கப்,
சர்க்கரைவள்ளிக் கிழங்கு – ஒன்று (வேகவைத்து, (வேகவைத்து, பொடியாக நறுக்கவும்),
பச்சை மிளகாய் – 2
(மிகவும் பொடியாக நறுக்கவும்),
துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை – சிறிதளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையானளவு.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு.

maravalikizhanku poritcha kozhukatai - 2026

செய்முறை:

மைதாவுடன் உப்பு சேர்த்து, நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களைத் தாளித்து பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து, வேகவைத்து பொடியாக நறுக்கிய வள்ளிக் கிழங்கு சேர்த்து, மஞ்சள்தூள், கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுதான் பூரணம்.

மைதா மாவை சப்பாத்தி போல் இட்டு, அதன் நடுவே பூரணத்தை வைத்து, விருப்பமான வடிவம் கொடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.