
சேமியா வாங்கி பாத்
தேவையானவை:
வேக வைத்த சேமியா – ஒன்றரை கப்,
பிஞ்சுக் கத்திரிக்காய் – 8,
வெங்காயம் – 2,
புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
சிவப்பு மிளகாய் – 2,
கடுகு – கால் டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, அது சூடான தும் கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கத்திரிக்காய் சேர்த்து வதக்கிய பிறகு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
காய் நன்கு வதங்கியதும் புளிக் கரைசல், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது வேக வைத்த சேமியா சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்