
பொட்டுக்கடலை சாதம்
உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – 1 கப்
சாதம் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 4
கடுகு – 1/4 ஸ்பூன்
கருவேப்பில்லை – சிறிது
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
உப்பு – சிறிது
எண்ணெய் – சிறிது
செய்முறை
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்தமிளகாய், கருவேப்பில்லை சேர்த்து தாளித்து பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கியவுடன் வடித்த சாதம் அல்லது மிஞ்சிய சாதம் (முதல் நாள் சாதம்) சேர்த்து அதனுடன் பொட்டுக் கடலை மாவு தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும் விரும்பினால் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பறிமாறலாம்.
(இச்சாததை காலையில் சமைத்து மதியம் சாப்பிட சுவை கூடும்) குழந்தைகளுக்கு ஏற்ற உடனடி சாதம். சுவை மற்றும் சத்து நிறைந்தது.



