
கீரை போண்டா
தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப்,
கடலை மாவு – 2 கப்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய அரைக்கீரை – ஒரு கைப்பிடி அளவு,
உருளைக்கிழங்கு – ஒன்று,
எண்ணெய் – 250 மில்லி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்துக்கொள்ளவும். கீரையை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி, வேகவைத்த உருளைக்கிழங்கு, கொஞ்சம் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அரிசி மாவு, கடலை மாவு, சிறிதளவு உப்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, தேவையான நீர் விட்டு கெட்டியாகக் கரைக்கவும். செய்து வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.



