![samai puttu](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2020/05/samai-puttu.jpg?w=696&ssl=1)
சாமைப்புட்டு
தேவையானப் பொருட்கள்:
சாமை – 1 கப்
பொடித்த வெல்லம் – ¾ கப்
தேங்காய் துருவல் – ¼ கப்
ஏலக்காய்த்தூள் – ¼ கப்
முந்திரிப்பருப்பு – 5
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை
சாமையை நன்றாக ஊறவைத்து, தண்ணீரை வடித்தபின் லேகாக உலர்த்தி மாவாக அரைக்கவும். இதனுடன் உப்பு, இளம் சூடான தண்ணீர், தேவையான அளவு சேர்த்து பிசறி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் கட்டியில்லாமல் ஒரு சேர உதிர்த்து, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் முந்திரிபருப்பை வறுத்து, தயாராக உள்ள புட்டுடன் கலந்து உண்ணலாம்.
பெண்களுக்கு அதிக வலிமை தரக்கூடியது இந்த புட்டு. ஆண்களுக்கு தாது புஷ்டி தரும். சாமையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.