ஆண்மை பலம் பெற – பசும்பால்:
அரசம்பழத்தை பாலில் போட்டு காய்ச்சி வெல்லத்துடன் தினம் இரவு உணவுக்குப் பின் பருகி வந்தால் ஆண்மை வலுப்பெறும், தழற்சி நீங்கும்.
ஓரிதழ்த் தாமரையை அரைத்து பாலில் கலந்து இரவு உணவுக்குப் பின் குடித்தால் தழற்சி நீங்கும்.
செம்பருத்திப் பூவை உலர்த்தி இடித்து நீரில் கொதிக்க வைத்து வென் சூட்டில் சர்க்கரை சேர்த்து இரவு உணவுக்குப்பின் குடித்தால் பலம் கிடைக்கும்.
கருப்பு உளுந்தை நன்கு வறுத்து, பேரீச்சம்பழம் சேர்த்து அரைத்து காய்ச்சிய பாலுடன் கலக்கவும். அதனுடன் தேனுடன் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டால் தழர்வு நீங்கும்.