
தக்காளி பச்சைப் பட்டாணி புலாவ்
தேவையானவை:
பெங்களூர் தக்காளி – 3,
ஊறவைத்த பச்சைப் பட்டாணி – கால் கப்,
பாசுமதி அரிசி – 2 கப்,
மஞ்சள்தூள் -ஒரு சிட்டிகை,
கரம்மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் -அரை கப்,
புதினா, கொத்தமல்லித்தழை தலா – 3 டேபிள்ஸ்பூன்,
ஊறவைத்த முந்திரி – 4,
பச்சை மிளகாய் – 3,
பெரிய வெங்காயம் -ஒன்று,
எண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப.
செய்முறை:
வெறும் வாணலியில் பாசுமதி அரிசியை லேசாக வறுக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், முந்திரி, புதினா, கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் கெட்டியான விழுதாக அரைக்கவும். குக்கரில் 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, அரைத்து வைத்த விழுதினை சேர்த்து வதக்கவும்.
இதில் 3 கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்து, பட்டாணி, அரிசி ஆகியவற்றைச் சேர்த்து, மிளகாய்த்தூள், தயிர் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு, குக்கரை மூடி வெயிட் போட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும். ஆவி வெளியேறியதும் குக்கரைத் திறந்து நன்றாகக் கலந்துவிடவும்.
இதற்குத் தக்காளி ராய்த்தா சரியான சைட்டிஷ்