
கறிவேப்பிலை – பிரண்டை துவையல்
தேவையானவை:
கறிவேப்பிலை, புதினா – தலா ஒரு கைப்பிடி அளவு,
இளசான பிரண்டை – 10 துண்டுகள்,
பூண்டு – 4 பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
எண்ணெய் – உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பூண்டை தோல் உரிக்கவும். இஞ்சியை தோல் சீவி, நறுக்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, புதினா, பிரண்டை ஆகியவற்றை வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக சிறிதளவு எண்ணெயில் வறுக்கவும்.
வதக்கிய கறிவேப்பிலை, புதினா, பிரண்டை, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, புளி, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
குறிப்பு: இந்தத் துவையல் பசியைத் தூண்டும்; ஜீரண சக்தியை அதிகரிக்கும்.