குழந்தைகளை கவர்ந்திழுக்கும் பிரெட் மஞ்சூரியன்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
bread manjuriyan

பிரெட் மஞ்சூரியன்

தேவையானவை:
கோதுமை பிரெட் – 4 ஸ்லைஸ்,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி, கேரட், குடமிளகாய் – தலா ஒரு கைப்பிடி அளவு, கடலை மாவு, கரம் மசாலாத்தூள்,
மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
சோயா சாஸ், தக்காளி சாஸ் – தலா ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை எடுத்துவிட்டு, சதுரமாக வெட்டி, வெண்ணெயில் பொரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு. காய்கள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் வதங்கியதும், பொரித்த பிரெட், உப்பு, கடலை மாவு சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.