spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஇலந்தைப்பழம் இலந்தைப்பழம் செக்க சிவந்த பழம்.. இலந்தை தரும் இணையற்ற பலன்கள்!

இலந்தைப்பழம் இலந்தைப்பழம் செக்க சிவந்த பழம்.. இலந்தை தரும் இணையற்ற பலன்கள்!

- Advertisement -
ilanthai

இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் உள்ளன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.

வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை.

சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும். இதற்கு சிறிய பேரிச்சை, காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது. அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை. இதில் கி, ஙி2, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.

இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.

இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படும். இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

சீமை இலந்தை நாட்டு இலந்தையின் ஒரு பிரிவாகும். இதன் மருத்துவப் பயன்கள் அனைத்தும் ஒன்றே.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு. உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.

100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது.இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. இந்த இலைகளை மை போல் அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும். உடலின் மேற்பகுதியில் ஏற்படும் கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.

இலந்தைப் பழத்தில் “க்ளூடாமிக்” அமிலம் உள்ளது. இது மூளையைச் சுருசுருப்பாக்கும். எனவே மூளை உழைப்பு செய்வோர்க்கல்லாம் இலந்தைப்பழம் சிறந்த பழமாகும்.
ஆப்பிள் பழத்தில் இல்லாத வைட்டமின் A உயிர்ச்சத்து இலந்தையில் நிறைய காணப்படுகிறது.

நிறைய சுண்ணாம்புச் சத்தும் இருக்கிறது. எனவே எலும்பு, பற்கள் உறுதி பெற அடிக்கடி இலந்தைப்பழம் சாப்பிடலாம்.
வயிற்றுப்போக்கு, சீதளபேதி, கீல்வாயுப் பிடிப்பு, நீரிழிவு, மலச்சிக்கல், வேட்கை முதலியவற்றிற்கு இப்பழம் நல்ல மருந்து என்று நம் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

உடல் வியர்வை நாற்றம் போக: உள்ளங்கால், அக்குள், உள்ளங்கை போன்ற இடங்களில் இலந்தை இலைகளை நசுக்கிப் பிழிந்து அந்தச் சாற்றை வியர்வை வரும் இடங்களில் தடவிக் காயவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் குளித்தோ அல்லது அந்த இடத்தை கழுவியோ வந்தால் வியர்வை நாற்றம் போகிவிடும்.

தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தப்பெருக்கு, வாய்ப்புண் இவற்றிற்கு இழந்தை இளந்தளிர்களை நீரில் போட்டு, உப்பைச் சேர்த்துக் கொதிக்க வைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள்.

தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

எலும்புகள் வலுப்பெற

உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

பித்தத்தைக் குறைக்க

உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

வாந்தி குறைய

பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

உடல் வலியைப் போக்க
சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும். முன்பெல்லாம் இரவு பகல் பாராமல் வேலை செய்வேன் இப்போது அப்படி செய்ய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவார்கள். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

செரிமான சக்தியைத் தூண்ட

பசியில்லாமல் அவதிப்படுபவர்களும் சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில்
ஏற்படும் அவஸ்தைகளை தடுக்கும்
மருந்தாகவும் இலந்தை பழம் பயன்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe