
மார்பகங்களின் வளர்ச்சியை முழுமையாக எட்டிவிட்ட டீன் ஏஜ் பருவத்தினர் முகத்துக்கு பொலிவு கொடுப்பதைப் போன்று மார்பக பராமரிப்புக்கும் தனி நேரம் ஒதுக்க வேண்டும். குளிக்கும் போது ஆலிவ் எண்ணெய் கொண்டு பத்து நிமிடம் கீழிருந்து மேல் நோக்கியவாறு வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம்.
குளித்து முடித்த பிறகும் சருமத்திற்கு க்ரீம் உபயோகிப்பது போல் மார்பகத்துக்கும் தடவி வந்தால் மார்பகங் கள் மென்மையாக இருக்கும். முகத்துக்கு தடவும் க்ரீம் போலவே மார்பகங்களின் அழகை கூட்டும் தரமான மசாஜ் க்ரீம்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி பயன்படுத்தலாம்.

இயற்கையான முறையில் என்றால் வெந்தயப்பொடியைப் பசும்பாலில் குழைத்து கீழிருந்து மேலாக வட்ட வடிவில் மசாஜ் செய்வது போல் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். வாரம் ஒரு முறை இதைச் செய்தாலே போதும். மார்பகங்களின் தளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் என்பதோடு மென்மை யாகவும் வைத்திருக்கும்.

வாரம் ஒருமுறையாவது மார்பகங்களை மிதமான சூடுநீரில் மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரால் மசாஜ் செய்து குளித்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து பொலிவு கொடுக்கும். ஐஸ் கட்டிகளையும் மசாஜ் செய்ய பயன்படுத்தலாம். தொடர்ந்து செய்யும் போது தொங்கும் மார்பகங்கள் எடுப்பாக மாறும்.
ஈஸ்ட்ரோஜெனிக் உணவுகள் மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட ஹார்மோன்கள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருப்பது தான் காரணமாக இருக்கும். அதிலும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜென் குறைவாகவும் இருப்பது தான் முக்கிய காரணம்.

எனவே ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளான சிக்கன் சூப், சோயா உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், முட்டை, சூரியகாந்தி விதைகள், எள் மற்றும் ஆளி விதை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வர வேண்டும்.
ஆரோக்கியமான கொழுப்புக்கள் கூட மார்பகங்களின் அளவை அதிகரிக்க உதவும். எனவே ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான முட்டைகள், அவகேடோ, நட்ஸ், ஆலிவ் ஆயில், மீன், வேர்க்கடலை வெண்ணெய் போன்றவற்றை அன்றாடம் உட்கொள்வதோடு, உடற்பயிற்சியையும் செய்து வர, மார்பகங்களில் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.
வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்து வர, மார்பக திசுக்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, மார்பகங்கள் பெரிதாக ஆரம்பிக்கும்.
அன்னாசிப் பூவும் மார்பகங்களின் அளவைப் பெரிதாக்கும். அன்னாசிப்பூ ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும். உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமானால், மார்பகங்கள் தானாக பெரிதாகும். அதற்கு அன்னாசிப்பூவை டீ வடிவில் உட்பொள்வது நல்லது. ஆனால் இந்த டீயை சரும பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
சோம்பு சோம்பில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் உள்ளது மற்றும் இது தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும். மேலும் இதில் உள்ள இதர உட்பொருட்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும். அதற்கு சோம்பைக் கொண்டு டீ தயாரித்துக் குடியுங்கள்.

அதிமதுரம் அதிமதுரம் சோம்பைப் போன்றது. இதுவும் மார்பகங்களின் வளர்ச்சியைத் தூண்ட உதவும். இந்த அதிமதுரத்தை தினமும் 1 மிலி எடுத்து வந்தால், வயிற்று உப்புசம் நீங்கும். ஆனால் ஏற்கனவே இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் இதை எடுக்கக்கூடாது.
புராரியா மிரிஃபிகா (Pueraria mirifica) தாய்லாந்தைச் சேர்ந்த இந்த மூலிகை, முதுமையைத் தடுக்க தயாரிக்கப்படும் க்ரீம்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை மார்பகங்களைப் பெரிதாக்கவும் உதவும். அதற்கு இது மாத்திரை வடிவில் மருந்துக்கடைகளில் விற்கப்படுகிறது.
கிரேட்டர் பர்டாக் (Greater burdock) இதை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இது மார்பகங்களில் மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்