spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுமூலம் தான் உங்கள் கவலையின் மூல காரணமா? இத ட்ரை பண்ணுனா அது நிர்மூலம்!

மூலம் தான் உங்கள் கவலையின் மூல காரணமா? இத ட்ரை பண்ணுனா அது நிர்மூலம்!

- Advertisement -
mulam

இன்று அதிகளவானோர் எதிர்நோக்கும் பிரச்சனை மலச்சிக்கல். மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் ரத்த நாளத்தின் வீக்கத்தால் ஏற்படுவது.

இது நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்து செய்வதாலும், மலம் கழிக்க கஸ்டப்படுபவர்களுக்கும், அதிக காரம் சாப்பிடுபவர்களுக்கும் இது ஏற்படுகிறது இதை எப்படி அறிந்துகொள்ளலாம் என்றால், ஆசன வாயில் அரிப்பு ஏற்படும், மலம் கழிக்கும் போது வலி வருவது, மலம் கழிக்கும் போது இரத்தம் வருதல் இத்தோடு , இது முளை போல் வெளியே தள்ளப்பட்டிருக்கும்.

இதனை எப்படி தடுக்கலாம் மலம் கழிக்கும் உணர்வு வந்தால், உடனே மலம் கழிக்க வேண்டும். இந்த நேரத்தில் அதிகளவான காரமும், அசைவ உணவுகளையும் தவிர்த்து கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக நார்ச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்க நேரிட்டாலும் அதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

மூல நோய் உள்ளவர்கள் தினமும் ஏதாவது பழம் சாப்பிட வேண்டும். உணவில் கருணைக்கிழங்கையும் அவரைக்காயையும், அடிக்கடி உணவில் சமைத்து சாப்பிடுங்கள். இத்துடன் பிரண்டை, இஞ்சி போன்றவற்றையும் சாப்பிடவும். இதில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

இன்றைய காலத்தின் வாழ்க்கைச் சூழ்நிலையில், இத்தகைய பிரச்சனை அனைவருக்குமே வருகிறது. இதற்கு காலை எழுந்தவுடன் மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால், தீர்வு காணலாம். சிலருக்கு சந்ததியிலிருந்து வரலாம். பெண்களுக்கு கருத்தரிக்கும் போது வரக்கூடும்.

mulam

மூலநோயானது மனரீதியாக பாதிப்படையச் செய்யும். மனம் தளரும், அடிக்கடி கோபம் கொள்ளச் செய்யும். தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும், சீறி விழச் செய்யும். இது போன்ற உணர்வுகள் மூலநோய் உண்டானவர்களுக்கு, ஆரம்பக் காலத்தில் இருக்கும். பருப்பு வகைகள், பேரிக்காய், பசலைக்கீரை வாழைப்பழம், நெய்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். கருணைக்கிழங்கை தவிர மற்றைய கிழங்கை பயன்படுத்தக் கூடாது.

பசியைத் தாங்கி சரியான நேரத்தில் சாப்பிடாதிருந்தாலும், உடலுறவின் போது சிறுநீர், மலம் அடக்குவதாலும் , உணவில் நார்ச்சத்து வகைகளை குறைத்து உண்பதாலும் மலச்சிக்கல் ஏற்பட்டு மூலநோய் ஏற்படும், அடிக்கடி நீர் அருந்தாமையினாலும் குடல் இளக்கமின்றி இந்நோய் தோன் றும்.

அதிக உடலுறவு ,அதிக காரமான உணவு உண்போருக்கும் பெண்களின் குழந்தைப்பேறு கால சமயங்களில் குழந்தை வெளி வரும் போது முக்குவதாலும் மூல நோய் தோன்றும்.

மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகக் கூறுகின்றனர். வெளிப்படையாக நமக்கு புலப்படுவதும் இவைகள் தான்.

1- உள் மூலம் – ஆசன வாயின் உட்பகுதியில் குருத்து போல் வளர்வது.

2- வெளி மூலம் – ஆசனவாயின் தசைப்பகுதிகள் பிதுங்கி வெளி வருவது .

3- இரத்த மூலம் – மலம் வெளிவரும் போது இரத்தம் கசிவது.

மூல நோயின் அறிகுறிகள் :

மலச்சிக்கல், அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல், உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல், ஆசனக்கடுப்பு, மலத்தோடு இரத்தம் கழிதல், மார்பு துடிப்பு, முக வாட்டம்,போன்றவை ஏற்படும்.

மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும் .

முள்ளங்கி சாறு
தினம் இரண்டு கப் முள்ளங்கி சாறு அருந்துவது மூல நோயின் பொது மருத்துவ தீர்வில் ஒன்றாகும். முதலில் 1/4 கப் அதன் பின் அரை கப் என படிப்படியாக இதன் அளவை அதிகரித்தல் நல்லது. நாளொன்றுக்கு இரண்டு முறை இந்த ஜூஸ் அருந்த வேண்டும்.

அத்திப்பழம்
மூன்று அல்லது நான்கு உலர்ந்த அத்திப்பழத்தை எடுத்து இரவில் நீரில் ஊற வைக்க வேண்டும், பின் காலையில் எழுந்து முதல் பானமாக அந்த நீரோடு இந்த அத்திப்பழத்தையும் பருக வேண்டும், இதனால் நாள்பட்ட மூலம் குணமாகலாம்

மாதுளம் பழ தோல்
மாதுளம் பழத்தின் தோலை எடுத்து நீரில் கொதிக்க வைக்கவும், இந்த நீரை தினம் இரண்டு முறை பருகி வரலாம்.

இந்த மாதுளம் பழ தோல் நீர் மூலம் வயிற்றில் உள்ள அனைத்து கோளாறுகள் மற்றும் புண்கள் ஆகியவை குணமாகும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு வலிகள் குறையும்.

ஆட்டு பால்
ரத்த போக்கு ஏற்படும் அளவிற்கு வளர்ந்த மூல நோய்கள் கூட ஆட்டு பாலினால் குணமாகும், அரை கப் ஆட்டு பாலுடன், கடுகு பொடி, அரை ஸ்பூன் சேர்த்து சிறிது சர்க்கரை சேர்த்து அருந்தி வர மூலவியாதி காணாமல் போகும்.

மோர்
மூல வியாதி குணமடைய மோரில் கல் உப்பு சேர்த்து, கொஞ்சம் இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து அருந்தி வரவும்.

மாங்கொட்டை
நாள்பட்ட மூலத்திற்கு தீர்வாக காயவைத்த மாங்கொட்டை இரண்டை எடுத்து மிக்ஸியில், இடித்து பொடித்து கொள்ளவும். தினமும் இரண்டு ஸ்பூன் இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.

வாழைப்பழம்
மூல நோய்க்கு சிறந்த நிவாரணியாக வாழைப்பழம் பார்க்கப்படுகிறது. நாட்டு வாழைப்பழம் எடுத்து நன்கு பிசைந்து அதனுடன் பால் சேர்த்து கூழ் பதத்தில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நாவல் பழம்
கோடை காலத்தில் கிடைக்கும் நாவல் பழம் மூலத்திற்கு மிகவும் நல்லது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 நாவல்பழங்களுடன் சிறிது உப்பு சேர்த்து உண்டு வரலாம், இதன் மூலம் நீரிழிவும் கட்டுப்படும்.

நூல்கோல்
நூல்கோல் இலைகள் கேரட் மற்றும் கீரை ஆகியவற்றை கொண்டு சாறு போல செய்து, தினமும் 50மிலி அளவில் அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.

பாகற்காய் இலைச்சாறு
மூல நோய் சரியாக காலையில் நீர்மோருடன் பாகற்காய் இலை சாற்றை கலந்து, கொஞ்சம் மஞ்சள் சேர்த்து அருந்தி வரலாம். மஞ்சள் கிருமி நாசினி என்பதால் உள்ளிருக்கும் காயங்களில் உள்ள கிருமிகள் கொல்லப்படும்

கருஞ்சீரகம்
கருப்பு சீரகம் எனப்படும் சாஜுரா வை பொடியாக்கி, தினமும் ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகலாம், காலையில் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

இதேபோன்று ஒரு கைப்பிடி கருப்பு எள்ளை எடுத்து இரண்டு மடங்கு நீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து எள் வெந்தபின் இறக்கவும். பின் அதனை அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர மூல நோய் காணாமல் போகும்

வில்வ இலை ———25 கிராம்
வில்வகாய் ———–25 கிராம்
வில்வஓடு ————25 கிராம்
வில்வப்பட்டை ——- 25 கிராம்
இஞ்சி —————–10 கிராம்
சோம்பு —————- 10 கிராம்

இவற்றை ஒன்றிரண்டாய் சிதைத்து, தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து, ஒரு டம்ளர் அளவு அதிகாலையிலும் மாலையிலும் சாப்ப்பிட்டு வர, ரத்த மூலம், ஆசனவெடிப்பு, சீழ்மூலம் போன்ற ஒன்பது வகை மூலங்களும் குணமாகும். மூலாதாரம் பலப்படும்.

1)உணவில் கீரை வகைகள்,காய் பழ வகைகள்,தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

mulam

2)அடிக்கடி நீர் அருந்தவேண்டும்,தினமும் காலை மாலை மலம் கழித்தல் வேண்டும், மலச்சிக்கல் உள்ள போது உடலுறவு கூடாது,தின மும் நடைப் பயிற்சி அல்லது எளிய உடற் பயிற்சி மேற்கொள்ளுதல் நல்லது.

3)உணவில் விளக்கெண்ணை, நெய், வெங்காயம், தவறாது சேர்த்தல் வேண்டும். கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்தல் நன்று.

பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்.

மூல நோய்க்கு துத்தி இலை சிறந்த மருந்தாகும். இரண்டு கை அளவு துத்தி இலை, நறுக்கிப் போட்டு, சிறிது மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் பத்து,அரிந்து போட்டு விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.

வெளி மூலத்திற்கு துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து அதனுடன் சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர சில நாட்களில் வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)

நன்றாக செழித்து வளர்ந்த குப்பைமேனி செடியைத் தேவையான அளவு எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வெயிலில் போட்டு நன்கு காய விடவும். காய்ந்த பின் இலை, வேர், தண்டு அனைத்தையும் இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ளவும். இதில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு சேர்த்துப் பிசைந்து காலை , மாலை என நாற்ப்பது நாள் சாப்பிட்டு வர அனைத்து மூல வியாதியும் குணமாகும்

துத்தி இலைகளைப் பறித்து, ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு, அதை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். அதை நான்கு சின்ன வெங்காயத்தோடு சேர்த்து நன்கு மை போல அரைத்து மோரில் கலந்து தொடர்ந்து 4 நாட்கள் சாப்பிட்டாலே போதும். 9 வகையான மூலமும் குணமடையும். இது துளசியைப் போன்றுதான் சுவையுடன் இருக்கும். வெறும் வாயில் கூட மென்று சாப்பிடலாம். எந்தவித பக்க விளைவும் ஏற்படாது

குப்பைமேனி இலையை கைப்பிடி அளவு எடுத்து நன்கு அலசிவிட்டு நன்கு மை போல அரைத்து அதில் பசும்பால் ஊற்றி மூன்று நாள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடனே கட்டுக்குள் வரும்.

இந்த மருந்துகளைச் சாப்பிட்டு வரும் போது அதிக காரம், பச்சை மிளகாய், கோழிக்கறி சேர்க்கக் கூடாது. மிளகு சேர்த்துக் கொள்ளலாம். உடல் உறவு கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe