இவ்வாறு செய்யுங்கள் துவரம் பருப்பு சாறு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dhall

துவரம்பருப்பு சாறு

தேவையானவை:
துவரம்பருப்பு. – அரை கப்,
மஞ்சள்தூள். – ஒரு சிட்டிகை,
பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (நறுக்கிக்கொள்ளவும்),
நறுக்கிய கொத்தமல்லித் தழை – 2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க:
கடுகு, கறிவேப்பிலை, சீரகம், எண்ணெய் – சிறிதளவு

அரைத்தெடுக்க:
தேங்காய் துருவல் – கால் கப், பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சோம்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
துவரம்பருப்பை நீர் விட்டு குழைய வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். வேகவைத்த துவரம்பருப்பை அதில் சேர்த்து ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்த விழுதை சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். தாளிக்க கொடுத் துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லித் தழையால் அலங்கரிக்கவும்.

இதை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். கொஞ்சம் ‘திக்’காக வைத் தால்… இட்லி தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.