ஏப்ரல் 18, 2021, 12:01 மணி ஞாயிற்றுக்கிழமை
More

  அந்தரங்க பகுதியில் ஏற்படும் அரிப்பை அகற்ற எளிய வழிகள்!

  Itching in the genitals - 1

  பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பை உடனடியாக குணப்படுத்த எளிதில், இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துதல் வேண்டும்; இயற்கையாக எளிதில் கிடைக்கும் பொருட்களில் எது பிறப்புறுப்பு அரிப்பைக் கட்டுப்படுத்தும் என்று அறிந்து செயல்படல் வேண்டும்.

  இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடாதீர்கள், இறுக்கமான உள்ளாடைகளை அணியாதீர்கள். காட்டன் துணிகளை பயன்படுத்துங்கள். கழிவறையைப் பயன்படுத்திய பின், குளித்த பின் என பிறப்புறுப்பில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்
  .
  இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள். குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள். நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள். உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள். பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.

  பொதுவாக உடல் அதிக சூடாகினால், அதிலும் முக்கியமாக பிறப்புறுப்பு சூடானால், உடலில் மற்றும் பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை உடனடியாக போக்க குளிர்ந்த நீரை பயன்படுத்தி அந்த சூட்டைக் குறைக்க முயலுங்கள். குளிக்கும் பொழுது காலில் இருந்து நீரை ஊற்றத் தொடங்கி, படிப்படியாக உடல் முழுதும் நீரை ஊற்றவும். இது உடலின் சூடு உடனடியாக வெளியேற உதவும்; இதைவிடுத்து நேரடியாக பிறப்புறுப்பில் அல்லது அதன் மீது தண்ணீரை அள்ளிக் கொட்டுவது என்பது கூடாது.

  உங்கள் பிறப்புறுப்பில் வாசனை ஏற்படுத்தும் நல்ல மணம் கொண்ட பவுடர் அல்லது வாசனை திரவியம் போன்றவற்றை பூசியிருந்தால், நறுமணமிக்க சோப்பை பயன்படுத்தி இருந்தால், பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே, வெறும் நீரால் பிறப்புறுப்பை நன்கு கழுவி, லேசான – சாதாரண சோப்பை பயன்படுத்தி மீண்டும் நீரினால் நன்கு கழுவி சோப்பு முழுதையும் முழுவதுமாக அகற்றி விடுதல் வேண்டும். சென்ட், பவுடர் போன்ற மேக்கப் பொருட்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தாமல் தவிர்க்கவும்.

  உடலில் அணியும் பிறப்புறுப்பை தொடும் ஆடைகள் சுத்தமானது தானா என்று சோதித்து அணியவும். துணிகளை துவைத்து உடுத்தவும்; மேலும் இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் அணிவதை தவிர்த்தல் நல்லது. இறுக்கமான ஆடைகளை அணியும் பொழுது உடல் உறுப்பிற்கு, முக்கியமாக பிறப்புறுப்பிற்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போய், கடுப்புகள்,அரிப்புகள் போன்றவை ஏற்பட்டு விடுகின்றன; எனவே, இவ்வகை ஆடைகளை தவிர்த்தல் வேண்டும்.

  குளியல் தொட்டியில், மூழ்கிக் குளிக்கும் தொட்டியில் அரை கப் இந்த ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து, காலை நன்கு விரித்து வைத்து, வினிகர் கலந்த தண்ணீர் நன்கு பிறப்புறுப்பில் படும்படியாக குளிக்க வேண்டும். இவ்வாறு குளித்தால், வினிகரில் இருக்கும் பலத்த pH அமில கூறுகள், பிறப்புறுப்பின் அரிப்பை உடனடியாக போக்கிட உதவும்.

  பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் பொழுது அரிக்காமல் விட்டுவிடுவது நல்லது. அரிக்கும் பொழுது அரிக்க வேண்டாம் என்று கூறுவது முட்டாள்தனமாக தான் இருக்கும்; ஆனால், அரிக்காமல் விடுவது பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பைக் குறைத்து, விரைவில் அதை தானாகவே மறைய செய்யும். அறிக்கை வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் பொழுது, உங்கள் மனதை வேறுபக்கம் திசை திருப்பி, இதைக் குறித்து எண்ணாமல் இருக்க முயல வேண்டும்.

  இரவு உறங்கும் பொழுது உள்ளாடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் எதுவும் அணியாமல், பருத்தி ஆடைகளை அணிந்து, சற்று தளர்வான சூழலில் உறங்குவது நல்லது. ஏனெனில் இரவில் உள்ளாடைகள் அணியாமல் இருப்பதால், பிறப்புறுப்பு சற்று காற்றோட்டமாக இருக்கும்; அதன் மீது காற்று படும் பொழுது, அக்காற்று அங்கு அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்

  இரவு உறங்கும் பொழுது உள்ளாடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் எதுவும் அணியாமல், பருத்தி ஆடைகளை அணிந்து, சற்று தளர்வான சூழலில் உறங்குவது நல்லது. ஏனெனில் இரவில் உள்ளாடைகள் அணியாமல் இருப்பதால், பிறப்புறுப்பு சற்று காற்றோட்டமாக இருக்கும்; அதன் மீது காற்று படும் பொழுது, அக்காற்று அங்கு அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்

  பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டு, என்னதான் அரித்து பார்த்தாலும் அரிப்பு நீங்காத பட்சத்தில், திருமணமான பெண்கள் தன் துணையை தேடுவதுண்டு. ஏனெனில், பிறப்புறுப்பில் சாதாரணமாக ஏற்படும் அரிப்பை அவர்கள் உடலுறவு உணர்ச்சியாக எண்ணி கணவரை அழைக்க ஆரம்பித்துவிடுவர்; ஆனால் இது மிகவும் தவறான செயல். இந்த மாதிரியான பிறப்புறுப்பு அரிப்பு நேரத்தில் உடலுறவு கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.

  பிறப்புறுப்பில் அடிக்கடி அல்லது அதிகப்படியான அரிப்பு ஏற்படும் நேரத்தில், நன்கு உடலுக்கு தேவையான அளவு நீர் அருந்துதல் வேண்டும். மேலும் குடிக்கும் நீரின் அளவு 2.5 லிட்டருக்கு அதிகமாகாமல் இருக்குமாறும் பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட்டிருந்தால், அதை உடலின் நீர் அளவு சரி செய்துவிடும். மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை என சிறிதாக சிறிதாக தண்ணீரை பருகிக் கொண்டே இருத்தல் நல்லது.

  உடலில் ஏற்பட்ட ஈஸ்ட் நோய்த்தொற்று காரணமாக அரிப்பு ஏற்படுகிறது என்றால், கண்டிப்பாக உணவு உட்கொள்ளும் பொழுது மற்றும் அந்த ஈஸ்ட் தொற்று சரியாகும் வரை சர்க்கரையை சாப்பிடாமல் நிறுத்தி வைப்பது, தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் சர்க்கரையை எந்த வடிவத்திலும் அதாவது சாக்லேட், இனிப்பு நிறைந்த பானங்கள், உணவு என எபப்டியும் உண்ணாமல் தவிர்க்க வேண்டும்.

  தயிர் : தயிரை அரிப்பு, எரிச்சல் உண்டாகும் இடங்களில் தடவி வர குணமாகும். தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அங்கு வளரும் பூஞ்சைகள், தொற்றுகளை அழித்து விடும். ஈரப்பதம் அளிக்கும்.

  வேப்பிலை : வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தண்ணீர் குளுமையானதும் பிறப்புறுப்பை கழுவலாம். இவ்வாறு செய்ய அங்கிருக்கும் தொற்றுகள், கிருமிகள் அழியும். வேப்பிலையை சிறு உருண்டைகளாக தினமும் காலை சாப்பிட்டு வந்தாலும் நல்லது.

  கற்றாழை : கற்றாழை ஈரப்பதம் நிறைந்தது. அதோடு பூஞ்சைகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது எனவே அதன் சதை பகுதியை எடுத்து பிறப்புறுப்பின் அரிக்கும் இடங்களில் தடவுங்கள். அதை அப்படியே உண்டு வந்தாலும் பலன் கிடைக்கும்.

  பூண்டு : பூண்டுக்கு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளை எதிர்த்து போராடும் ஆற்றல் அதிகம் எனவே பூண்டை தட்டி அதை வைட்டமின் E எண்ணெய்டன் கலந்து தடவலாம்.

  தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய்யை அரிக்கும் இடங்களில் தடவி வந்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும்.

  மேலும் பிறப்புறுப்பில் அடிக்கடி மற்றும் அதிகப்படியான அரிப்பு ஏற்பட்டால், அது ஈஸ்ட் தொற்று தானா அல்லது வேறு எதுவுமா என்று மருத்துவரை சந்தித்து சோதித்தறிவது அவசியம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »