ஏப்ரல் 20, 2021, 3:02 மணி செவ்வாய்க்கிழமை
More

  கால்,கை முட்டிகளில் மட்டும் கறுப்பா இருக்கா? கவலைய விடுங்க எளிய வழிகள்!

  Hand foot - 1

  நல்ல சிவந்த நிறத்தை உடையவர்களுக்குக் கூட முழங்கை, முழங்கால், கணுக்கால், கழுத்தின் பின்புறம் கருமை படர்ந்து இருந்திருக்கும். எத்தனையோ சிகிச்சை எடுத்தும் எளிதாக நிறம் மாறாது. ஆனால் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த கருமையான இடங்களை நிறம் மாறச் செய்யலாம்
  எலுமிச்சையை சரிபாதியாக நறுக்கி சருமத்தில் கருமை படர்ந்துள்ள இடங்களில் தேய்த்து ஊறவிட்டு கழுவலாம்.

  எலுமிச்சை சாறுடன் பாலாடை, வெள்ளரிக்காய் சாறு அல்லது மஞ்சள்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து ஊறவிட்டு பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

  வெள்ளரிக்காய் சாறு, மஞ்சள் தூள், வினிகர் கலந்து கணுக்கால் பகுதியில் தேய்த்து அரை மணிநேரம் ஊறவிட்டு பின்னர் எலுமிச்சையால் தேய்த்து கழுவ கருமை படிப்படியாக மறையும். ஒருமாதத்திற்கு தொடர்ந்து இதனை செய்யவேண்டும்.

  மூன்று கரண்டி தயிருடன் சில துளிகள் வினிகர் சேர்த்து கலந்து கால் முட்டியில் கருமை உள்ள பகுதிகளில் தேய்த்து ஊறவிட்டு இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

  lemon
  lemon

  கடலைமா இரு கரண்டி, மஞ்சள் தூள் சிறிதளவு, பால் இரு கரண்டி என்பவற்றை பசை போல கலக்கவும். இதனை முட்டிப் பகுதிகளில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் கழுவ கருமை மறையும். வறண்ட தோல் மென்மையாகும்.

  பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் நன்றாக அரைத்து கை, கால் முட்டிப் பகுதிகளில் தேய்க்கவும். கருமை மறையும்.

  பசும் மஞ்சள் நல்ல மணத்தைத் தரும். எல்லா வயதினரும் எந்த வகை சருமத்தினரும் உபயோகிக்க உகந்தது. பசும் மஞ்சளை அரைத்து தயிரில் கலந்து கொள்ளவும். அந்த கருமையான பகுதிகளில் இந்த விழுதை தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, பிறகு குளிக்கவும். இப்படியே செய்து வந்தால் கருமை மறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

  வறண்ட சருமத்திற்கு மிகச் சிறந்த சிகிச்சை இது. பசும் மஞ்சளைக் அதன் இலையோடு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பசு‌ம் ம‌ஞ்சளை அரை‌த்து உட‌லி‌ல் தட‌வி‌‌க் கு‌ளி‌த்தா‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பிறக்கும்.

  pototo
  pototo

  அதோடு பாசிப் பயறு மாவைக் கலந்து பசைப் போல குழைத்துக் கொள்ளவும். இந்த விழுதை தினமும் பூசிக் குளித்தால் தோலில் கருமை உள்ள பகுதிகள் படிப்படியாக மறையும்.

  வி‌‌ட்டமின் E எண்ணெய் மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த எண்ணெயை கருமை உள்ள பகுதிகளில் பூசி ஊறவைத்து வெந்நீரில் குளிக்கலாம். கற்றாழைச் செடியை புதிதாக பறித்து அதை முட்டிக்கால், கணுக்கால் பகுதிகளில் கருமை உள்ள இடங்களில் தேய்த்து குளிக்கலாம்.

  எலுமிச்சைச் சாறு மற்றும் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து, கருமையான இடங்களில் அப்ளை செய்து, 3 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் சுத்தமாகக் கழுவலாம். வாரம் இருமுறை இந்த முறையைப் பின்பற்ற வேண்டும்.

  சிலருக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய் ஏதாவது இருக்கலாம். அவர்கள், இந்த பேக்கை யோசிக்காமல் பயன்படுத்தலாம். எலுமிச்சைச் சாற்றில் ஆன்ட்டி-பேக்டீரியல் ஏஜென்ட் மற்றும் de-pigmentation காம்பௌண்டு இருப்பதால், நிறத்தைக் கட்டுப்படுத்துவதோடு சருமத்தையும் பாதுகாப்பாக வைக்க உதவும்.

  onion 1
  onion 1

  சுத்தமான காட்டனை மோர் அல்லது பாலில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்து, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுபோன்று செய்துவரலாம். இதில் எந்தவித பக்க விளைவும் ஏற்படாது.

  உபயோகித்த, குளிர்ந்த கிரீன் டீ பேகை (Bag), கருமையான இடங்களில் வைத்து 2 நிமிடங்களுக்கு மென்மையாகத் தேய்த்து வந்தால், கருமை நீங்கும். இதை தினமும் இருமுறை செய்துவந்தால், பாசிட்டிவ் ரிசல்ட் நிச்சயம்.

  கற்றாழை ஜெல்லில் அலோயின்(Aloin) எனும் de-pigmentation காம்பௌண்டு இருக்கிறது. இது, சருமத்தின் கருமை நிறத்தை நீக்குவதற்குச் சிறந்த மருந்து. தூய்மையான கற்றாழை ஜெல்லை தூங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்து, காலையில் கழுவலாம். இப்படி தினமும் 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும்.

  வினிகர் – 1 டீஸ்பூன்
  தண்ணீர் – 1 டீஸ்பூன்
  தற்போது அனைத்து சூப்பர் மார்க்கெட்களிலும் ஆப்பிள் சிடார் வினிகர் கிடைக்கிறது. இதில் de-pigmentation காம்பௌண்ட்ஸ் அதிகமாக இருப்பதால், கருமை மறைந்து சருமம் புத்துணர்வு பெறும். வினிகரை அதே அளவிலான தண்ணீரில் கலந்து, பாதிக்கப்பட்ட இடங்களில் அப்ளை செய்து, ஐந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

  சிலர், சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவார்கள். மூட்டுகளில் கருமை நிறம் அதிகமாக இருப்பவர்கள், சன்ஸ்க்ரீன் மையப் பொருள்களில் zinc oxide அதிகமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இது, சருமத்தின் கருமையை அகற்றும் ஆற்றல் கொண்டது. அதேபோல், SPF 30 – 50 அளவுகளில் இருப்பது சிறந்தது.”

  தேங்காய் எண்ணையுடன் ஆவாரம்பூ சேர்த்து காய்ச்சி தேய்த்து வர முழங்கை, முழங்கால் கருமை நீங்கும்.

  alovera
  alovera

  ஆடு தீண்டாப்பாளை மூலிகையை சாறு எடுத்து அதை நல்லெண்ணையில் கலந்து அந்த சாறு வற்றும் வரை காய்ச்சி தேய்த்து வர மாறும்.

  மஞ்சள் தூள், சந்தன தூள், கடலை மாவு மூன்றையும் கலந்து சருமத்தில் தேய்த்து வர நல்ல பொலிவைத்தரும். முழங்கை மற்றும் முழங்கால் கருமையும் நீங்கும்.

  carrot
  carrot

  வெள்ளைநிறப்பூ காக்கரட்டான் மூலிகை இலையை அரைத்து முழங்கை மற்றும் முழங்காலில் தேய்த்து வர கருமை நீங்கும், இதை சருமத்தில் உள்ள கரும்படைகளிலும் தேய்த்து வர கரும்படை நீங்கும்.

  கடுகு எண்ணெயை இலேசாக சூடாக்கி கை மற்றும் கால் மூட்டுகளில் மசாஜ் செய்து விடவும். தினமும் இரவு நேரங்களில் இந்த மசாஜ் செய்துவிட்டு மறுநாள் குளிக்கும் போது குளிர்ந்த நீரில் கழுவினால் போதும்.

  கடுகை ரவைபோல் பொடித்து பசும்பாலில் குழைத்து மூட்டுகளில் தடவி ஸ்க்ரப் போல் செய்து வர லாம். ஒரே வாரத்தில் பலன் தெரியும். நிரந்தரமாக சரும நிறம் மாற வேண்டுமெனில் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு இதைப் பயன்படுத்துங்கள்.

  apple vinigar
  apple vinigar

  வெங்காயச்சாறு சத்துகள் மிகுந்தது. வழுக்கை தலையில் முடிவளர வைக்கும் அற்புத குணங்க ளைக் கொண்டிருக்கும் இந்த வெங்காயத்தின் சாறுடன் பூண்டு சாறு சேர்த்து முட்டிகளில் தேய்க்க லாம். இது கருமையைப் போக்குவதை விட சருமத்தில் இறந்த செல்களை நீக்குவதை துரிதப்படுத்தும்.

  உருளைக்கிழங்கில் இருக்கும் கேட்கோலேஸ் என்னும் என்சைம்கள் சருமத்தின் கருமையைக் குறைக்கின்றன. உருளைக்கிழங்கை வட்டவடிவில் நறுக்கி சாறு பட மூட்டு கருமையில் தேய்க்கும் போது சருமம் மிருதுவாகி நிறமாற்றமும் அடையும்.

  pupoo
  pupoo

  மூட்டுகளில் ஸ்க்ரப் செய்வதற்கு சர்க்கரை, ஓட்ஸ், கோதுமை தவிடு, ஒன்றிரண்டாக பொடி செய்த உப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். ஸ்க்ரப் செய்த பிறகு மாய்ஸ்ரைஸர் பயன்படுத்துவதை மறக்கவேண்டாம்.

  வெயிலினால் ஏற்படும் கருமையை போக்க கேரட்டை தோலை நீக்கிவிட்டு வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தபின் கைகளால் மசித்து வெயில் பட்ட இடத்தில் தேய்த்து அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் கருமை மறையும்.

  பச்சரிசி மாவு, கஸ்தூரி மஞ்சள், பால் அல்லது தயிர் சேர்த்து தினமும் தேய்த்து குளிப்பதன் மூலம் கருமை நிறம் மாறி பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

  curd
  curd

  ஒரு கரண்டி மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு அரைத்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால், முழங்கையில் இருக்கும் கருப்பு நீங்கிவிடும்.

  100 கிராம் காய்ந்த துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 கரண்டி வேப்ப எண்ணெய், 1 கரண்டி பன்னிர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பசை செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »