ஏப்ரல் 20, 2021, 3:49 மணி செவ்வாய்க்கிழமை
More

  பற்கள் பளீரென்று மின்ன வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க!

  teeth - 1

  பற்கள் சிலருக்கு மஞ்சள் நிறத்தில் காணப்படும். மற்றும் உள்புறத்திலும் கருமை நிறத்தில் காட்சியளிக்கும். இது பாரப்பதற்கே அசிங்கமாக காணப்படுவதுண்டு.

  ஏனெனில் ஒழுங்காக பல் துலக்காவிட்டாலோ, பல் இடுக்குகளில் உணவு துகள்கள் தங்கினாலோ அதுவும் பற்களின் நிற மாற்றத்திற்கு காரணமாகிவிடும் மற்றும் பற்சிதைவும் ஏற்படுத்துகின்றது.

  அத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்வழி சுகாதாரத்தில் கவனம் செலுத்தாததே முக்கிய காரணமாகும்.

  வாய் மற்றும் பற்கள் சார்ந்த நோய் பாதிப்புகளும் பற்களில் கறைகள் தோன்றுவதற்கு வழிவகுக்கும்.

  தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லை தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

  இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.

  ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.

  பற்களை சுத்தமாக்குவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் அளிப்பதிலும் ஆப்பிளின் பங்கு சிறந்தது. எனவே உணவை சாப்பிட்டு முடித்த ஒரு மணி நேரம் கழித்து ஆப்பிளை சில துண்டுகள் சாப்பிட்டு வர, பற்களில் கறை படிவதைத் தடுக்கலாம்.

  கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் பற்களில் உள்ள கறையைப் போக்க மிகச்சிறந்தது. கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வந்தாலும் அல்லது தினந்தோறும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடுவதன் மூலமும் பற்களில் உள்ள கறையைப் போக்க முடியும்.

  1 தேக்கரண்டி கிராம்புத் தூளுடன், 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்து, சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதன் மூலம் சுத்தமான பற்களைப் பெறலாம்.

  ஒரு பாத்திரத்தில் சிறிதளவு சமையல் சோடாவை எடுத்துக்கொண்ட பின்னர் சிறிது தண்ணீரால் உங்கள் டூத் பிரெஷை ஈரப்படுத்திக் கொள்ளவும். இப்பொழுது பேக்கிங் சோடாத்தூள் பிரெஷ் முழுதும் ஒட்டும்படி செய்யவும். பிறகு எப்பொழுதும் போல பல் துலக்குங்கள்.

  குறிப்பு: இது உப்பு சுவை கொண்டது என்பதை நினைவில் வைத்து சிறிதளவே பயன்படுத்துங்கள்.

  ஹைட்ரஜன் பெராக்சைடு:
  இதுவும் எந்தவொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பொருள்களில் ஒன்றாகும். ஏனெனில் காயங்களை சுத்திகரித்து, உங்கள் பற்களை வெளுப்பாக்கும் வேலையை எளிதாகச் செய்கிறது.

  சம அளவிலான ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் நீர் கலவையை எடுத்துக் கொள்ளுங்கள். பல் துலக்கிய பிறகு உங்கள் வாயைக் கழுவ இந்தக் கலவையை பயன்படுத்துங்கள். இந்த சிகிச்சையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தவும். கறைகளை நீக்கி, பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுக்கவும் உங்கள் வாயை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது.

  ஆப்பிள்கள்:
  ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும், இது உங்கள் பற்கள் இயற்கையாகவே சுத்தமாகிட உதவுகிறது. இந்த வழியில், உங்கள் பல்லிடிக்கில் துணுக்குகள் தங்காது. ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் இரத்தப்போக்கு தடுப்பு ஆகிய நன்மைகள் உண்டாகும்.

  தேவையான பொருட்கள்:

  • 1 கப் தண்ணீர்

  • 1/2 கப் பேக்கிங் சோடா

  • அலோ வேரா ஜெல் 1 தேக்கரண்டி

  • எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெயில் 10 துளிகள்

  • காய்கறி கிளிசரின் 4 தேக்கரண்டி

  செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

  • இதில் அலோ வேரா ஜெல் மற்றும் அத்தியாவசிய எண்ணெயைச் சேர்க்கவும்.

  • இறுதியாக, கிளிசரின் சேர்க்கவும்.

  • ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை அதை குலுக்கி, பின்னர் ஒரு மூடியுள்ள கண்ணாடி பாத்திரத்தில் சேமித்து வையுங்கள்.

  உங்கள் பற்களைத் துலக்குவதற்கு இதை பற்பசையைப் போல பயன்படுத்துங்கள்.

  எள் விதைகளின் வடிவம், உணவுத் துணுக்குகளை நீக்கி உங்கள் பற்களைப் பிரகாசிக்கச் செய்கின்றன.

  • இது மிகவும் எளிதானது. எள் விதைகளை சிறிது நேரம் விழுங்காமல் மென்றுகொண்டே இருங்கள்.

  • பிறகு பிரஷை எடுத்து துலக்க ஆரம்பியுங்கள். மெல்லப்பட்ட எள் விதைகள் மற்றும் உங்களின் உமிழ்நீர் கொண்டு உருவாகியுள்ள பசையைப் பற்பசையாக பயன்படுதூங்கள்.

  • சூடான நீரில் வாயை நன்கு கொப்பளித்துக் கழுவவும்.

  ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் தக்காளி:
  இந்த இரண்டுமே வைட்டமின் சி நிறைந்தவை. இவற்றை பற்கள் மீது தேய்ப்பதால் பிளாக் (plaque) போவதல்லாமல் பற்களை வெண்மையாக்கும் வேலையையும் செவ்வனே செய்கின்றன. தேய்த்த பின் கழுவுவதற்கு முன் சில நிமிடங்கள் அப்படியே விடவும்.

  டார்ட்டர் (கறைகள்) எதிர்ப்பு பற்பசை:
  இயற்கையான இந்த வீட்டுப் பற்பசைக்கு நன்றிகள். பற்பசை செய்ய நிறுவனங்கள் பயன்படுத்தும் இரசாயனங்களிலிருந்து உங்கள் பற்களைக் காத்துக் கொள்ளலாம். மேலும், இயற்கைப் பொருட்களின் உதவியோடு கறைகளை நீக்கி ஆரோக்கியமான பற்களைப் பெறலாம்.

  தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய் 1/2 கப்

  • சமையல் சோடா 3 தேக்கரண்டி

  • 2 தேக்கரண்டி ஸ்டெவியாத்(Stevia) தூள்

  • அத்தியாவசிய எண்ணெய் 20 சொட்டு (உங்கள் விருப்பப்படி)

  செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா, மற்றும் ஸ்டீவியா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.

  • அதை நன்கு கலந்து பிறகு, நீங்கள் தேர்வு செய்த அத்தியாவசிய எண்ணெயைச் (உதாரணமாக, அது எலுமிச்சை, புதினா அல்லது லாவெண்டர்)சேர்க்கவும்.

  • ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை நன்கு கலந்து பிறகு கண்ணாடி ஜாரில் இந்தப் பேஸ்டை சேமித்து வைக்கவும்.

  • நீங்கள் வழக்கமான பற்பசைக்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் இதைப் பயன்படுத்தலாம்.

  கேரட் மற்றும் செலரி:
  பச்சைக் காய்கறிகள் உங்கள் பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. ஏனென்றால் அவைகளை எடுத்துக்கொள்ளும்போது உங்கள் உமிழ்நீர் உற்பத்தி அதிகரித்து உங்கள் பற்கள் வலுவடைகின்றன.

  • உங்கள் பசியைத் திருப்திப்படுத்தும் ஒன்றை (செலரி அல்லது கேரட்) உணவு இடைவேளைகளுக்கிடையில் சிற்றுண்டிபோல எடுத்துக்கொள்ளுங்கள்.

  பாதாம்:
  கொட்டைகளை முழுதாக சாப்பிட்டால் அவைகள் உங்களுக்கு இவ்விஷயத்தில் உதவலாம். இவற்றை உண்ணும் போது உங்கள் பற்களுக்கு எதிராகத் தோன்றும் உராய்வு காரணமாக இது சத்தியம். இது உங்கள் பற்களின் கறைகள் மற்றும் பல்லிடுக்களில் சேரும் உணவுத்துணுக்குகளை சிறிது சிறிதாக நீக்குகிறது.

  • உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் சிக்கியிருக்கும் எந்த எச்சமும் நீங்க ஒரு நாளுக்கு ஒரு கைப்பிடி பாதாம் கொட்டைகள் போதுமானது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »