03-02-2023 12:06 AM
More
  Homeநலவாழ்வுபளபள சருமம் தரும் கோரைக்கிழங்கு!

  To Read in other Indian Languages…

  பளபள சருமம் தரும் கோரைக்கிழங்கு!

  korai kizhanku - Dhinasari Tamil

  நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், சாலையோரங்களில், தோட்டங்களில் கிடைக்கும் மூலிகைகள், வீட்டில் அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் பொருட்களை கொண்டு பாதுகாப்பான எளிய மருத்துவத்தை மேற்கொள்ளலாம். அந்தவகையில், கோரை கிழங்கின் மருத்துவ பயன்கள்
  இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வளர்கின்ற ஒரு புல்வகைச் சேர்ந்த சிறுசெடி. தாவரம். தாவரத்தின் வேர்க் கிழங்குகளே கோரைக் கிழங்கு எனப்படும். தண்டுகள் மூன்று பட்டையானவை. உறுதியற்றவை.

  கோரைக்கிழங்கு இலைகள் தட்டையானவை, கூரானவை, நீண்டவை. கிழங்குகள் முட்டை வடிவமானவை. தமிழகமெங்கும், கடற்கரை ஓரங்கள், காடுகள், பாழ்நிலங்களில் தானே வளர்கின்றது.

  பல்வேறு நன்மைகளை கொண்ட கோரை கிழங்கு எந்தவிதமான காய்ச்சலையும் போக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த கூடியது.

  மாதவிலக்கை தூண்டக் கூடியது. இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பதற்கு கோரைக்கிழங்கு மருந்தாக பயன்படுகிறது.

  பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. சுருக்கத்தை போக்கி தோலுக்கு மென்மை தருகிறது. சிறுநீரை பெருக்க கூடியதாக விளங்குகிறது.
  வெள்ளைபோக்கு, இடுப்பு வலி, அடி வயிற்று வலி, கருப்பை புண்களை போக்கும் மருந்தாக விளங்கிறது.

  கோரை கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, சந்தன பொடியுடன் பால் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் பூசவும். சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

  இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர முகச்சுருக்கம் சரியாகும். முகப்பரு வராமல் தடுக்கும். மருக்கள் விலகிபோகும்.

  பல்வேறு நன்மைகளை கொண்ட கோரைக்கிழங்கு தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. உடல் வலியை போக்கும். காய வைத்த கோரை கிழங்கு, பொடி ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

  முத்துக்காசு என்றும் குறிப்பிடுவர். உலர்ந்த கோரைக்கிழங்கு மருந்துப் பொருளாக மட்டுமின்றி ஊதுவத்தி போன்ற நறுமணப் பண்டங்கள் செய்யவும் பயன்படுகிறது.

  கோரைக்கிழங்கு உடல் கட்டிகளை அகற்ற உதவும் டானிக் போன்றது. கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. கோரைக்கிழங்கினால் பொதுவாக குளிர்காய்ச்சல் நீங்கும். அதிதாகம் பித்த வளர்ச்சி போன்றவற்றிற்கும் இது நல்ல மருந்து. கடுமையான குன்ம நோயை அகற்றி குணமாக்க கீழ்கண்ட முறையில் இம்மருந்தினை தயாரிக்க வேண்டும்.

  இரண்டு பச்சை கோரைக்கிழங்கை எடுத்து நறுக்கி நூறு மில்லி நீரில் போட்டு பாதியளவாகச் சுண்டக்காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்தக் குடிநீரை வேளைக்கு ஒன்றரை அவுன்ஸ் வீதம் முன்று வேளை என்ற கணக்கில் இருபது நாட்கள் சாப்பிட்டு வர கடுமையான குன்ம வயிற்றுவலி குணமாகும். குடிநீரை சாப்பிட்டால் அஜீரணபேதி, சீதபேதி, வாந்திபேதி ஆகியவையும் குணமாகும்.

  குடலில் பூச்சித்தொல்லை இருந்தால் ஒரு கோரைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து நன்கு இடித்துப் பின் சிறிது தேன் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.

  கோரை கிழங்கு 5 கிராம் வரை எடுத்து இதனுடன் கால் ஸ்பூன் சுக்குப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர காய்ச்சல் தணியும்.

  காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அகன்றுவிடும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நாட்களில் சுடு சோற்றில் எலுமிச்சம் பழம் சாறும் கொஞ்சம் நெய்விட்டும் சாப்பிடவேண்டும். இதே முறையில் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.

  தாய்பால் குறைந்து விட்ட தாய்மார்கள் கோரைக்கிழங்கை பச்சையாகக் சந்தனக்கல்லில் இழைத்து மார்பகத்தில் பற்றாக இட பால் நன்றாக சுரக்கும்.

  கோரைக்கிழங்கை காய வைத்து தூள் செய்து கொண்டு ½ தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் 1 டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசை வலி குணமாகும்.

  கோரைக்கிழங்கு, காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குணமாகும்.
  தேள்கடி, குளவிக்கடி ஆகியவைகளுக்குப் பற்றிட்டால் குணமாகும்.

  ரத்தவட்ட அணுக்களை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது.

  கோரை கிழங்குடன் ஊறவைத்த வெந்தயம், சோம்பு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிக்கட்டி குடித்துவர சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர் எரிச்சலோடு வெளிவருதல், சிறுநீரோடு ரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட பிரச்னைகளை கோரை கிழங்கு சரி செய்கிறது.

  கோரைக்கிழங்கு சூரணம் ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை அதிகமாகும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  twenty − 14 =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,054FansLike
  385FollowersFollow
  82FollowersFollow
  74FollowersFollow
  4,435FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  பதான்- வெற்றி விழா கொண்டாட்டம்..

  பதான் எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளதாக வெற்றி விழாவில் ஷாருக்கான் உருக்கமாக பேசியுள்ளார்.இது அவரது...

  என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா: ரஜினி உருக்கம்!

  சாருகேசி நாடகத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை வெங்கட் எழுதியுள்ளார். சாருகேசிக்கான பொறி காலம் சென்ற கிரேசி மோகனிடமிருந்து வந்ததாகும்

  வசூலில் சாதனை படைத்த பதான்..

  சர்ச்சையில் சிக்கிய 'பதான்' படம் முதல் இருநாளில் வசூலில் சாதனை படைத்து பெரும் பரபரப்பை...

  விஜய்யின் ‘வாரிசு’ ரூ.210 கோடி வசூலா? தயாரிப்பாளர்கள் பொய் சொல்கிறார்கள்- இயக்குநர் எச்.வினோத்

  விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ பட வசூல் நிலவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வம்சி...

  Latest News : Read Now...