December 5, 2025, 8:43 PM
26.7 C
Chennai

பக்கவாதம், எலும்பு முறிவு எளிதில் குணமாக்கும் அரிய மூலிகை அருவதா!

aruvatha - 2025

அருவதா மூலிகை, மலைப் பிரதேசங்களில் செழிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வறட்சியைத்தாங்கக் கூடியது.

அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 – 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இலைகள் 3 – 5 அங்குல நீளமுள்ளவை. இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும்.

மூன்றடி உயரம் வரை மட்டுமே வளரும், சிறு செடியினமாகும். இலைகள் முருங்கை இலைகள் போல, சிறிதாக தண்டுகளில் இணைந்து காணப்படும்.
இதன் பூக்கள் மஞ்சள் நிரத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாத்ததில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன.

நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன் படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ, முதலியன வராது.

மருத்துவப் பயன்கள் -:
இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம்.

இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது. இது கண் வலியைப் போக்கும், வாந்தியைக குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும்,

மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும்.

விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும், ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும்,
சுளுக்கு, தசைப்பிடிப்பு மற்றும் எலும்பு முறிவுகளை சரிசெய்யும், உடல் வலிகள் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வாக அமைகிறது. மூல வியாதிகளை சரிசெய்யும், உடல் அணுக்களை பாதிக்கும் புற்று வியாதிகளை சரிசெய்யும் இயல்புடையது

நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும், பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள் குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எரிச்சலைப் போக்கும், எலும்பு வலி, உடலில் ஏற்படும் தினவு, இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.
அருவதா மூலிகை. இளம்பிள்ளைகளின் செரிமானமின்மை பாதிப்புகளுக்கு மருந்தாகிறது. கண் வியாதிகளைப் போக்கும்.

இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப்போல கடைந்து, உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதன் மூலம், மூட்டு வலிகள், சிறுநீர்ப்பை அடைப்புகள், சுவாசத்தில் ஏற்படும் பாதிப்புகளான மூச்சுத்திணறல் கோளாறுகளை சரிசெய்து, இதயத்தைக் காக்கும்.

இலைகளை நிழலில் உலர்த்தி, இடித்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம் மற்றும் இலவங்கப்பட்டை இவற்றைப் பொடியாக்கி, அனைத்தையும் ஒன்று கலந்து, அதில் சிறிதளவு எடுத்துக் கொண்டு அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, உடலில் உள்ள சூடு தணியும்.

இலைகளை சிறிது எடுத்து, நன்கு மையாக அரைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும். சதாப்பு இலைச்சாற்றை, தேனில் குழைத்து சாப்பிட்டும் வரலாம்.

aruvatha satha pu - 2025

சதாப்பு இலைகளுடன் சிறுநாகப்பூ விதைகளைச் சேர்த்து அரைத்து, அதில் சிறிதளவு எடுத்து தினமும் சாப்பிட்டு வர, விட்டுவிட்டு வரும் ஜுரம் மற்றும் இருமல் பாதிப்புகள் விலகும்.

அதிமதுரம், பேரரத்தை,வசம்பு மற்றும் சதாப்பிலை இவற்றை சேர்த்து, தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடித்து தினமும் பருகி வர, ஜுரம் மற்றும் உடல் வலிகள் தீரும்.

பாரிச வாயு எனும் பக்கவாதத்திற்கு
சதாப்பிலைகளை நன்கு அரைத்து, உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவி வர, சிறிது சிறிதாக பாதிப்புகள் விலகி, செயல்பட ஆரம்பிக்கும். வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் குணமாகும் தன்மை மிக்கது.

சதாப்பிலைகளை சேகரித்து, அவற்றை சிறிது நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, அந்த நீர் சுண்டி வந்ததும், ஆற வைத்து, தினமும் இரு வேளை அல்லது மூன்று வேளை பருகி வர, மூட்டு வலி சரியாகும். குடல் புழுக்கள் அழியும். உடல் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகள் நீங்கி, உடல் உறுப்புகளின் இயக்கம் சீராகும்.
கடுமையான ஆஸ்துமா, சளி இருமல் பாதிப்பு உள்ளவர்கள் மூச்சு விடுவதில், சுவாசத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, இரவில் உறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருவார்கள். அவர்களின் இந்த பாதிப்புகள் நீங்கி, சுவாசம் சீராகி, உடல் நலம் மேம்பட்டு நல்ல உறக்கத்தை அடைய, சதாப்பிலை உதவிசெய்யும்.

இலைகளை நன்கு உலர்த்தி, தூளாக்கி வைத்துக்கொண்டு, தூபக்காலில் உலர்ந்த தேங்காய் மூடிகளை வைத்து, தணலை உண்டாக்கி, அதில் உலர்ந்த சதாப்பிலை தூளையோ அல்லது உலர்ந்த இலைகளையோ இட, எழும் புகையை, தினமும் ஆஸ்துமா மற்றும் இருமல் பாதிப்புள்ளவர்கள் நன்கு சுவாசிக்க, சளியின் கடுமை படிப்படியாகக் குறையும். நல்ல உறக்கமும் வரும். இந்தப் புகையை, காக்கா வலிப்பு உள்ளவர்களும் சுவாசிக்க, பாதிப்புகள் விலகும்.
இதன் இலையுடன் சிறிது மிளகுசேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2 – 3 குன்றி எடை தாய்ப் பாலில் கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள கோழையைக் கரைக்கும். சுரம்வலி (இசிவு) இவற்றைப் போக்கும். அல்லது இதன் இலைச்சாற்றில் 10 – 15 துளி தாய்ப் பாலுடன் கலந்து கொடுக்க முற் கூறப் பட்ட பிணிகளைக் குண்ப்படுத்தும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து குழந்தைகளுக்குத் தேகத்தில் பூசி ஸ்நானம் செய்விக்கச் சீதள சம்பந்தமான பல பிணிகளையும் வர வொட்டாமல் தடுக்கும்.

இன்னும் இதனை இதர சரக்குகளுடன் கூட்டி சூரணமாகவும், மாத்திரை களாகவும் செய்வதுண்டு, அவற்றுள் சில முக்கிய முறைகளாவன.

சதாப்பிலைச் சூரணம் – நிழலில் உலர்த்திச் சதாப்பு இலை,சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம், சன்ன லவங்கப்பட்டை,சதகுப்பை விசைக்குப் பலம்1 தனியா பலம் 6 இவற்றை ஒருமிக்க கல்லுரலில் போட்டு கடப்பாறையால் நன்றாய் இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடி பிரமாணம் சமனெடை கற்கண்டு சூரணம் சேர்த்து தினம் 2 – 3 வேளை கொடுத்து வர வாயுவை கண்டிக்கும். சீதளத்தை விரைவில் அகற்றும் ஸ்தூரிகளுக்கு உண்டான உதிரச்சிக்கலையும் வயிற்றில் மரித்துப போன கருவையும் வெளியாக்கும். இன்னும் இதன் பெருமையைக் கூறமிடத்துச் சூதக சந்நி வாயுவினால் காணுகின்ற வயிற்றுவலி, இசிவு முதலிய ரோகங்களுக்கு சிறந்த அவிழ்தமாகும்.

சதாப்பிலை மாத்திரை-:பச்சை சதாப்பு இலை விராகனெடை 8,கோரோசனை விராகனெடை 1, உரித்த வெள்ளைப் பூண்டுவிராகனெடை 2, இவற்றை கல்வத்திலிட்டுக் கையோயாமல் ஒரு சாமம் அரைத்து வருக ஒரு சமயம் மெழுகு பதத்துக்குப் போதிய ஈரமில்லாவிட்டால் சிறிது தாய்ப் பால் கூட்டியரைத்து பச்சைப் பயிறு, உழுது பிரமாணம் மாத்திரைகளாகச் செய்து நிழலிறுலர்த்திச் சீசாவில் பத்திரப்படுத்துக. இதனை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகட்கு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் 2 வேளை தாய்ப் பாலில் கொடுக்க சுரம், வலி, மாந்தம்,இருமல் முதலிய பிணிகள் தீரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories