
தலைமுடி வளர…
தலைமுடி உதிர்ந்து சொட்டையானால், வெள்ளைப் பூண்டு பற்களைத் தேனில் உரைத்து தேய்த்து வர இருபது நாள்களில் முடி வளரத்தொடங்கும்.
தலைமுடி கருமையாக…
செம்பட்டைத் தலைமுடி இருப்பவர்கள் கறிவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்றாகத் தைலமாக காய்ச்சி
தலைக்குத் தடவி வர முடி நன்றாகக் கறுப்புடன் அடர்த்தியாகவும் வளரும்.
தாமரைப் பூவை கஷாயம் வைத்து காலை, மாலை பருகி வர, நரை, திரை மாறி விடும். மூளை பலப்படும். தேகம் சிவந்து காணப்படும்.
தலைவலிக்கு…
சிறிதளவு உப்புடன் மிளகையும் சேர்த்து அரைத்து எடுத்து நெற்றியில் பற்று போட தலைவலி போயே போய்விடும்.
மல்லிகை மலருக்கு தலைவலியைப் போக்கும் தன்மை உள்ளது. பெண்கள் தலையில் சூடிக் கொள்ளலாம். ஆண்கள் தலையணையில் மல்லிகை மலர்களைத் தூவிப் படுத்தாலும் தலைவலி குணமாகும்.
நிழலில் உலர்த்திய மகிழம்பூவை இடித்துத் தூளாக்கி சிட்டிகையளவு எடுத்து நாசியில் வைத்து முகர துர்நீர் பாய்ந்து வந்து தலை வலியைப் போக்கும்.
தாது விருத்தி
தாது நீர்த்துப் போய் போக சக்தி குறைந்து சோர்வு அடைபவர்கள் சிறிது அம்மான் பச்சரிசி இலையைப் பறித்து உலர்த்தி தூள் செய்து அதற்குச் சமமாகக் கற்கண்டு தூள் சேர்த்து காலை, மாலை 6 கிராம் வீதம் சாப்பிட்டு உடனே பசும்பால் அருந்தி வர நல்ல தாது விருத்தி உண்டாகும்.
ஓரிதழ் தாமரைச் செடியின் இலையைப் பறித்து பச்சையாகவோ அல்லது உவர்த்திப் பொடி செய்தோ சம பாகம் சர்க்கரை சேர்த்து காலை, மாவை சாப்பிட்டு வர 15 தினங்களுக்குள் உடல் வெப்பம் தணிந்து சிறுநீர் தாராளமாயிறங்கும். தாதுவும் கெட்டிப்படும்.
வயதான ஆண்களுக்கு மட்டுமல்ல அநேக தற்கால இளைஞர் களுக்குக் கூடத்தான் குறியின் விறைப்புத் தன்மை குறைந்து துவண்டு விழுவதுண்டு. போகம் செய்ய ஆவல் எழும். ஆனால், உறுப்பு ஒத்துழைக்காது. இதற்கு கருவேலம் பிசின் ஒரு வரப்பிரசாதமாகும். நன்றாய்க் காய்ந்த கருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடி செய்து ஒரு சிட்டிகையளவு காலை, மாலை சாப்பிட்டு வர ஆண்மையும். தாது விருத்தியும் ஏற்படுவதுடன் குறியின் தளர்ச்சி நீங்கி விறைப்பும் ஏற்படும்.
கரிசலாங்கண்ணிக் கீரையை கூடுமானவரை பச்சையாகவே சாப்பிடலாம். அதிக காரம், புளி சேர்க்காமல் சமைத்தும் சாப்பிடலாம். பருப்புடன் சமைத்து சாப்பிட தாதுக்களை திடப்படுத்தும். ஈரல் நோயே வராது. வெள்ளை, வெட்டை நோய்கள் விலகும். பற்கள். தலைமுடி, கண்கள், தோல் ஆகியவை தேய்வு அடையாமல் வலிமை பெறும்.
தாது புஷ்டியடைய…
தென்னை மரத்துப் பாளை வெடிப்பதற்கு முன் எடுத்து வந்து உடைத்து அதனுள்ளே இருக்கும் இளம் பிஞ்சுகளை ஒரு கைப் பிடியளவு எடுத்து பசும்பால் விட்டரைத்து ஒரு சிறு உருண்டையளவு எடுத்து பசும்பாலுடன் ஆறு வாரங்கள் சாப்பிட தாது புஷ்டியடையும். அந்த நாள்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது.
அதிமதுரத்தைப் பாலில் கலந்து தேன் விட்டு அருந்த தாது பலம் பெறும்.
கனிந்த வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.
ஒரு தோலா முருங்கைப் பிசினில் ‘/ லிட்டர் நீர் விட்டுப் புதுப் பானையில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிடத் தாது கெட்டிப்படும்.
நிலப் பனங்கிழங்கு, சீனம் தண்ணீர் விட்டான் கிழங்கு. ஆனை நெருஞ்சிக்காய் இவற்றை வகைக்கு 15 கிராம் எடுத்து மை போல் அரைத்து கால்படி பசும்பாலில் கலந்து இரவில் சாப்பாட்டுக்குப் பின் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.
நாயுருவி விதை, வெங்காய விதை. முள்ளி விதை, முருங்கை விதை, முருங்கைப் பிசின் வகைக்கு 30 கிராம் சேர்த்து பசும்பால் விட்டரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒரு மாத்திரை பசும் பாலுடன் சாப்பிட்டு வர தாது கட்டும், வீரியவிருத்தி ஏற்பட்டு போக சக்தி அதிகரிக்கும்.
கற்கண்டு தூள் 50 கிராம், பொரித்தெடுத்த படிகாரம் தூள் 15 கிராம் இரண்டையும் கலந்து பத்தில் ஒரு பங்கை தினமும் காய்ச்சிய பசும்பாலுடன் சாப்பிட்டு வர நீற்றுப் போன தாது கட்டும்.,