
உடுப்பி ரசப்பொடி
தேவையானவை:
சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
தனியா – 100 கிராம், காய்ந்த மிளகாய் (நீளம்) – 100 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். ஆறிய பின் மிக்ஸி யில் பொடிக்கவும்.
குறிப்பு:
பொரியல், அரைத்துவிட்ட குழம்பு உள்பட பலவற்றுக்கும் பயன்படுத்தப்படும் மல்ட்டி பர்ப்பஸ் பொடி இது. உடுப்பி மற்றும் சுற்றுவட்டாரக் கோயில்களில் பரிமாறப்படும் ரசத்துக்கான பொடியும் இதுவே.