
பூனைக் கடிக்கு…
தும்பைச் பூச்செடியின் இலையை அரைத்து பூச தடிப்பு மறைந்து அரிப்பும் நின்று விடும்.
பூச்சிக்கடிக்கு…
அருகம்புல்லை வேரோடு பிடுங்கி சுத்தம் செய்து கஷாயம் வைத்து சாப்பிட விஷம் நீங்கும். எந்தப் பூச்சி கடித்திருந்தாலும் உடலி ஏற்பட்ட நமைச்சல் தடிப்பு எல்லாம் மறையும்.
பெரும்பாடு நீங்க…
பெரும் வெள்ளை நீங்க மருதோன்றி இலையை அரைத்து நெல்லிக்காயளவு பசும்பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரண்(i வேளை மூன்று தினங்கள் சாப்பிட்டால் போதும். புளி சேர்க்கச் கூடாது. நல்ல குணம் தெரியும்.
பேதியுடன் ஜூரமா?
குழந்தைக்கு பேதியுடன் சுரமும் இருந்தால் கற்பூரத்தூள் அரிசி அளவு எடுத்து தண்ணீரில் கரைத்து உள்ளுக்குக் கொடுக்கலாம். ஓயாது அழுவதும் நிற்கும். ஈரல் வீக்கங்களும் குறையும். சுரம் நிற்கும்.
பேன் தொல்லை நீங்க…
கருந்துளசி இலையை தலையணை மீது பரப்பி அதன் மீது மெல்லிய வெள்ளைத் துணியைப் போட்டு தலை வைத்துப் படுக்க உடனே பேன்கள் இறங்கி விடும்.
தூங்கப் போகுமுன் காடியை (வினிகரை) தலையில் அழுந்தத் தேய்த்து தலையில் ஒரு துணியைச் சுற்றிக் கட்டி, காலையில் சோப்பு அல்லது ஷாம்பூ தேய்த்துக் குளித்து வந்தால் போதும். இரண்டு மூன்று நாள்களுக்கு ஒரு முறை பேன்கள் ஒழிகிற வரையில் இதைச் செய்ய வேண்டும்.
வில்வக் காயை நன்றாக உலர்த்தி அதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க பேன். பொடுகு மறையும். கண்ணுக்கும் தோலுக்கும் நல்லது.