
விஷக்கடி சரியாக…
பூவரசன் பட்டையை 200 கிராம் அளவு எடுத்து இடித்து கஷாயம் வைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட விஷக்கடி குணமாகும்.
விஷம் தாக்காமலிருக்க…
எட்டி விதை சாப்பிடப் பழகியவர்களை தேள், பாம்பு ஆகியவற்றின் விஷம் தாக்குவதில்லை. மாறாகக் கடித்த விஷ ஐந்துவுக்கே விஷம் ஏறி அது மரிப்பதுண்டு.
விஷ முறிவுக்கு…
ஊமத்தையினால் ஏற்பட்ட நஞ்சைப் போக்க பருத்திப் பூவை சுத்தம்
செய்து கஷாயம் வைத்து சாப்பிட விஷம் முறியும்.
விஷ நீர் வடிய…
நீர் முள்ளி விதை, வெள்ளரி விதை இரண்டையும் சமமாக எடுத்து அரைத்து உள்ளுக்கு சாப்பிட நீர் தாராளமாகப் போகும். உடம் பிலுள்ள விஷ நீர் வடிந்து வீக்கம் இருந்தாலும் சரியாகும்.
விதை வீக்கம் போக…
பாரிஜாத மலர்களை (பவளமல்வி) இளஞ்சூடாக வதக்கி விதை வீக்கங்களுக்கும் அண்டவாதத்திற்கும் (ஹைட்ரசல்) வைத்துக்கட்டி வர ஆபரேஷன் இல்லாமலேயே வலியும் வீக்கமும் மறையும்.
முட்காவேளை வேர்ப்பட்டையை சேகரித்து உலர்த்தி இடித்து சலித்து வைத்துக் கொண்டு தினமும் இருவேளை வெந்நீரில் சாப்பிட்டு இச்சாபத்தியம் இருந்து வர படிப்படியாக வீக்கம் கரைந்து போகும்.