
அம்மை நோயைத் தடுக்க…
ஊரில் அம்மை கண்டிருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அம்மை ஒரு தொற்று நோய். பருத்தி பிஞ்சு பத்து, அதே எடை அளவு சீரகம். ஒரு சிறு வெங்காயம் இம்மூன்றையும் அரைத்து கச்சக்களவு உருண்டை செய்து நிழலில் உவர்த்தி காவை, மாலை ஓர் உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் அம்மை வராது. அப்படியே வந்தாலும் அதிகம் போடாது.
இருமல் சரியாக…
அரை ஸ்பூன் மிளகை தூள் செய்து, வெண்ணெயில் குழைத்து காலை. மாலை மூன்று நாள்கள் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
முசுமுசுக்கை இலையை சுத்தம் செய்து அரைக்கைப் பிடியளவு எடுத்து ஓர் அவுன்ஸ் நெய்யில் வதக்கி காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
கணைச் சூடு தணிய…
பேயன் வாழைப்பழத்தை வில்லைகளாக நறுக்கி அரை ஆழாக்கு
சிற்றாமணக்கு எண்ணெயில் போட்டு ஊற வைத்து காலை, மாலை ஒரு வில்லை வீதம் எடுத்து சாப்பிட்டு வந்தால் கணைச்சூடு தணியும்.
ஜன்னி வந்து விட்டதா?
30 கிராம் இலவங்கத்தை இலேசாக இடித்து நீர் விட்டுப் பாதியாக காய்ச்சி அரை ஸ்பூன் வீதம் பாவில் கலந்து அவ்வப்போது கொடுத்து வந்தால் ஜன்னி குறையும்.
இலவங்கப்பட்டையை நீரில் ஊறவைத்து, அந்த நீரைக் குடிப்பதற்குக் கொடுத்து வந்தாலும் ஜன்னியின் வேகம் குறையும்.
அவித்த கோழி முட்டையின் மஞ்சள் கரு, பூ நாக பஸ்பம், கள்ளி நாயகம் இவை சேர்த்து காய்ச்சி எடுத்து தைலத்துடன் வேப் பெண்ணெய் கலந்து உள்ளுக்குக் கொடுத்தும் மேலுக்கு பூசியும் வர ஜன்னி சரியாகும்.
ஜலதோஷத்துக்கு…
கசகசாவை பாலில் அரைத்துக்கொடுத்து வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
மஞ்சளை தூள் செய்து நெருப்பில் போட்டு அதிலிருந்து வரும் புகையை நாலைந்து முறை உள்ளுக்கு இழுத்து சுவாசித்து வந்தாலும் ஜலதோஷம் உடனடியாக நீங்கும்.
காசித் தும்பையைப் பிழிந்து அதன் சாற்றை முக்கில் தடவினாலும்
ஜலதோஷம் குணமாகும். சுக்கு, மிளகு கலந்த காப்பி சாப்பிட ஜலதோஷம் சரியாகும்.