
சீத பேதிக்கு…
கருவேல மரத்தின் காய்களில் பிஞ்சுமில்லாமல் முற்றிய காயுமில் லாமல் செங்காயாக பறித்து உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு 35 கிராம் எடுத்து 35 அவுன்ஸ் நீர் விட்டு 4 அவுன்சாக சுண்ட வடிகட்டி வேளைக்கு 1 அவுன்ஸ் அல்வது 2 அவுன்ஸ் வீதம் காலை, மாலை கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர அமீபியாசிஸ் என்ற சீதபேதி சரியாகும்.
ஆவாரம் பூ. செடியின் வேரை இடித்துச் சாறெடுத்து அடுப்பிலேற்றி இரவு முழுவதும் ஊறிய சாற்றை உட்கொள்ள ஆயுள் வரை சீதபேதியே வராது.
இரத்த மூலத்துக்கு…
மாதுளம் பழத்தோலைச் சுட்டு அதை நையத்தட்டி தூளாக்கி தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரைக் கொண்டு ஆசனத்தைக் கழுவி வந்தால் இரத்தம் வருவது நிற்கும். இரவில் கண் விழித்தல் கூடாது. அதிக அளவில் தயிர், மோர் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயிலில் அலையக் கூடாது.
நாகலிங்கப் பூவை பச்சையாக எடுத்து சம அளவு வெண்ணெய், கற்கண்டு கூட்டி அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும்.
வெங்காயச் சாறு 9 அவுன்ஸ், பசு நெய் 2 அவுன்ஸ், பசும்பால் 9 அவுன்ஸ், அதிமதுரம் 10 ாம் எடுத்துக் கொள்ளவும். அதி மதுரத்தை பால் விட்டு அரைத்து வெங்காயச் சாறு, பசு நெய், பசும்பால் இவற்றுடன் கலந்து பதமாக காய்ச்சி ஒரு பீங்கானில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு இரண்டு வேளை தினசரி ஒரு ஸ்பூன் ஐந்து நாள்கள் சாப்பிட இரத்த மூலம் குணமாகும்.
அடிபட்ட வீக்கம் சரியாக…
துணியை கட்டெரித்த கரி, பனைவெல்லம், சுண்ணாம்பு மூன்றையும் சம அளவு எடுத்து மை போல் அரைத்து பூசி வர வீக்கம் வாடி விடும்.
*புளி, உப்பு சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து சக்கையை எடுத்து விட்டு இரும்புக் கரண்டியில் விட்டுக் கொதிக்க வைத்து, தாங்கும் சூட்டுடன் பற்று போட்டு வர வீக்கம் வாடி விடும்.
இரத்தக் கட்டு சரியாக…
கரிய போளத்தை எலுமிச்சம் பழச்சாறு விட்டு மைபோல் அரைத்து கொதிக்க வைத்துப் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு குணமாகும். 295. கண் கட்டிக்கு…
திருநீற்றுப் பச்சை இலையை கசக்கிப் பிழிந்து அந்த சாற்றை கண் கட்டியின் மீது தடவிவர கட்டி சீக்கிரம் பழுத்து உடையும்.
அரை மணிக்கொரு முறை உமிழ்நீரைத் தொட்டுத் தடவி வந்தாவே கட்டி அமுங்கி விடும்.