சூதகம் நின்று அவதிப்பட்டால்…
கருவாப்பட்டை 20 கிராம். அன்னபேதி வேர் 20 கிராம், கரியபோளம் 10 கிராம் இவற்றை தேன் விட்டரைத்து மாத்திரைகளாக செய்து வைத்துக் கொண்டு 2 அவுன்ஸ் நிலவேம்புக் கஷாயத்துடன் 2 மாத்திரை சாப்பிட சூதகம் ஒழுங்காகும்.
வலிப்பு நிற்க…
காக்காய் வலிப்பு வந்தவர்களுக்கு வெள்ளை வெங்காயத்தை சாறெடுத்து காதில் 2 அல்லது மூன்று சொட்டுகள் விட வலிப்பு அடங்கும்.
சீதக் கடுப்பிற்கு…
மாதுளங் கொழுந்தை பொங்கும் வெந்நீரில் போட்டு கஷாயம் வைத்து சாப்பிட குணமாகும்.
வெள்ளாட்டுப் பாலில் பூண்டை வேக வைத்துக் கொடுத்தாலும் சீதக் கடுப்பு குணமாகும்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து சாப்பிட குணம் தெரியும்.
சீதள நோய்கள் விலக…
நாகலிங்க மரத்தின் இலையை அரைத்து தலையில் அப்பி வைத்திருக்க ஜன்னி கோளாறு, தலைபாரம், நீரேற்றம் முதலியன நீங்கும். இதே இலையை கஷாயம் வைத்து காலை, மாலை குடித்து வர கால். பாதம் விரல்களில் இசிவு நீங்கும்.
பித்த நோய்கள் விலக…
வாரம் ஒரு முறை அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டுவர பித்தநோய்கள் அணுகாது.