
பகாளாபாத்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
பால் – 4 கப்
உப்பு – சுவைக்கு
தயிர் – 1டீஸ்பூன்
கேரட் – 1
மல்லி இலை – சிறிது
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
மோர்மிளகாய்
பச்சைமிளகாய்
இஞ்சி
கறிவேப்பிலை
செய்முறை
சாதத்தை உப்பு சேர்த்து குழைவாக வேக வைத்து குழிக்கரண்டியால் மசிக்கவும்.
காய்ச்சிய பால், தயிர் சேர்க்கவும்.
கலந்த சூடான சாதத்தை கரண்டியால் எடுத்து ஊற்றினால் தோசை மாவு பதத்திற்கு இருந்தால்தான் ஆறியதும் சரியான பதத்திற்கு வரும்.
கேரட்டை துருவி சாதத்தில் சேர்க்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கும் பொருட்களை தாளிதம் செய்து சாதத்தில் கலந்து பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி 1- 2மணி நேரம் சென்று சாப்பிடவும்.
விரும்பினால் முந்திரிப்பருப்பையும் தாளிக்கும் பொழுது சேர்க்கலாம். பிரயாணத்தின் போது இலையில் சாதத்தை கட்டும் பொழுது நடுவில் இரண்டு மெது வடைகளை வைத்து கட்டினால் ஊறிய மெது வடைகளுடன் சாதம் பிரமாதமாக இருக்கும்.