புற்றுநோய் வராமல் தடுக்க…
வில்வ இலை, வேப்பிலை, துளசி, மாவிலை, அருகம்புல், அத்தி இலை, வெள்ளை வெற்றிலை வகைக்கு 25 கிராம் எடுத்து மண் சட்டியிலிட்டு 3 லிட்டர் நீர் ஊற்றி பாதியாக சுண்டக்காய்ச்சி வீட்டிலுள் ளோர் அனைவரும் 50 மி.லி குடித்து வர வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும். புற்று நோய் வராது. உணவில் அடிக்கடி பாகற்காய், சுண்டைக்காய் சேர்த்து வரவும்.
யானைக்கால் ஜூரமா?
5 பல் பூண்டு. 20 மிளகு, 3 எருக்கு இலை முதலியவற்றை வெண் ணெய் போல் அரைத்து உள்ளுக்கு பாலுடன் சாப்பிட மூன்று நாள்களில் குணமாகும்.
யானைக்கால் விக்கத்திற்கு…
ஊமத்தை இலை, ஆமணக்கு இலை, செராக்கா இலை, மூக்கிரட்டைச் செடி முதலியவற்றை சம எடை எடுத்து அரைத்து வீக்கத்தின் மீது பூசி வர நாளடைவில் வீக்கம் குணமாகும்.
பிளவை கட்டிக்கு…
சவுரிக்கொடி வேரும், தும்மட்டிக்காய் வேரும் சமமாக சேர்த்தரைத்து பற்று போட ராஜ பிளவை கட்டி இரண்டொரு நாளில் குணமாகும்.
வயிற்றுக் கட்டிக்கு…
பூண்டு, திப்பிலி, கடுக்காய், வகைக்கு 10 கிராம் எடுத்து வெண்ணெய் போல் அரைத்து 60 மி.லி. கோமூத்திரத்தில் கலக்கி காலை, மாலை சாப்பிட்டு வர வயிற்றுக் கட்டி கரையும்.