health tips - 2026

அப்பாச்சி தீர்வு: பச்சிளம் குழந்தைகளுக்கு..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

குழந்தை மருத்துவம்

குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால் வசம்பை சிறிதளவு உரைத்து ஊற்றினால் வெளிக்குப் போவது நின்று விடும்.

காட்டத்திப் பூவை உலர்த்தி எடுத்து அத்துடன் விழலரிசி, வில்வப் பழ விதை, உவர்ந்த நெல்லிக் கனி, இவற்றை சமஎடை எடுத்து இடித்துப் பொடித்து சலித்து அரை தேக்கரண்டியளவு தேனில் சிறிது குழைத்து கொடுக்க அடிக்கடி போகும். மலம் கட்டுப்படும். அத்துடன் உடலும் தேறி வரும்.

காலையில் குழந்தை கண் விழித்ததும் சுத்தமான தேன் ஒரு சொட்டு நாக்கில் தடவி வர நாக்கு பிறண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

குழந்தை தினமும் இரண்டு மூன்று முறை மலம் கழிக்க வேண்டும்.

இல்லாமல் கஷ்டப்பட்டால் விதையில்லாத உலர்ந்த திராட்சைப்பழங்கள் நான்கை வெந்நீரில் ஊற வைத்து கசக்கிப் புகட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் வெளிக்குப் போய்விடும்.

ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ. சோப்போ வைத்தால் உந்துதல் ஏற்பட்டு குழந்தை மலம் கழிக்கும்.

குழந்தைக்கு தலைக்கு ஊற்றியவுடன் சாம்பிராணியையும் கஸ்தூரி, மஞ்சள் தூளையும் கலந்து புகைக் காட்ட வேண்டும்.

கஸ்தூரி மாத்திரையில் கால் பங்கு எடுத்து தாய்ப்பாலில் இழைத்துப் புகட்டி வர சளியே பிடிக்காது.

குழந்தைக்கு சளிப்பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயையும் கற்பூரத்தையும் காய்ச்சி பொறுக்கும் சூட்டில் சிறிது தடவினாலே நல்ல குணம் தெரியும்.

இரவில் விளக்கேற்றியவுடன் தினமும் சுட்ட வசம்பை சந்தனக் கல்வில் * உரைத்து உள்ளுக்குக் கொடுத் சிறிது தாப்புளைச் சுற்றித் தடவி, வெற்றிலையில் சிறிது எண்ணெய் தடவி விளக்கில் காட்டி வாட்டி பொறுக்கும் சூட்டில் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.

மாசிக்காய் ஒன்றை வேகவைத்து உலர்த்தி வைத்துக் கொண்டு குளித்தவுடன் இரண்டு உரை உரைத்து நாக்கில் தடவி வர நாக்கிலுள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.