அப்பாச்சி தீர்வு: ஈறுவீக்கம், இருமல், உள்நாக்கு, உடல் நமைச்சல், தாது விருத்தி..!

Published:

health tips - 2026

ஈறு வீக்கமா?

கொய்யா மரத்தின் வேர்ப்பட்டை கைப்பிடியளவு எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர ஈறு வீக்கம் குணமாகும்.

ஓயாத இருமலா?

கண்டங்கத்திரி வேரைத் தட்டிப் போட்டு காய்ச்சி வடிகட்டி ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் கால் ஸ்பூன் அளவு திப்பிலித் தூள் சேர்த்து தேன் கலந்து காலை நேரத்தில் சாப்பிட்டு வர ஓயாத இருமல் குணமாகும்.

உள்நாக்கு வளர்ந்து விட்டதா?

தான்றிக்காய். நெல்லிக்காய், கடுக்காய், எள், சேங்கொட்டை சம எடை எடுத்து வெல்லப் பாகில் போட்டு கெட்டிப்பதம் வரும் வரை எடுத்து தினசரி ஒரு வேளை கால் ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர உள்நாக்கு வளருதல் நின்றே போகும்.

உடல் நமைச்சல் விலக…

சூரத்தாவரை, நீர் வெட்டி முத்துப் பருப்பு, பூவரசன் மரப்பட்டை, உப்பு இவற்றை சம எடை சேர்த்து மை போல் அரைத்து உடல் முழுவதும் மண் பூசி அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க உடல் நமைச்சல் நீங்கும்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

தாது விருத்திக்கு…

சிறு அம்மான் பச்சரிசி இலையை உலர்த்தி தூள் செய்து சம எடை கற்கண்டு சேர்த்து வேளைக்கு 6 கிராம் வீதம் காலை, மாலை சாப்பிட்டு உடன் பசும்பால் பருக தாது விருத்தி உண்டாகும்.

Related articles

Recent articles

spot_img