health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

மேக வெட்டைநோய் குணமாக

ஓரிலைத்தாமரை வேரை அரைத்து பசுவின் மோருடன் கலந்து தினசரி இருவேளையாக 48 நாட்கள் குடிந்துவந்தால் மேகவெட்டை நோய் குணமாகும்.

கீழாநெல்லியை பசுவின் தயிரில் அரைத்து பகவின் மோருடன் கலந்து காலை,மாலை இருநேரம் 1 மாதஅளவுக்கு குடித்துவர மேகவெட்டை நோய் குணமாகும்.

குங்குமப்பூவை மூன்றுவிரல் அளவு எடுத்து சூடான பசும்பாவில் போட்டு தொடர்ந்து 30 நாட்கள் காலை, மாலை அருந்திவர மேகநோய்கள் குணமாகும். மாதவிடாய் கோாறுகள்

எலுமிச்சம் பழச்சாறு, வெங்காயச்சாறு, துளசிச்சாறு, ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். இவைகளை இரும்புச் சட்டியில் ஊற்றி அடுப்பின்மீது வைத்து காய்ச்ச வேண்டும். தைல பதமானவுடன் இறக்கிவைத்து சூடு ஆறியவுடன் கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும்.

வெறும் வயிற்றில் தினமும் அதிகாலையும், மாலையும் இந்த லேகியத்தில் சிறிதளவு எடுத்து 20 மி.லி. முதல் 30 மி.லி. தண்ணீருடன் அருந்திவர பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள் அனைத்தும் அகலும்.

வெட்டை சூடு குணமாக

ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை எடுத்துக்கொண்டு அது சிவப்பாகும் வரை வறுத்தபின் தூள் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்பு காலை, மாலை என தினம் இருவேளை வீதம் ஒரு வாரம் தொடர்ந்து உண்டுவர வெட்டைசூடு குணமாகும்.

சூதக வாய்வு

எள்ளையும், வெல்லத்தையும் சேர்த்து அரைத்து உருண்டைகளாகச் செய்து காலை, மாலை என இரண்டு வேளைகள் உண்டுவர பெண்களின் சூதக வாய்வு அகலும்.

தாய்ப்பால் சுரக்க

வெல்லம், எள், கேழ்வரகு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தனித்தனியே இடித்து உண்டுவந்தால் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.