ragi paniyaram - 2026

ஆரோக்கிய டிபன்: ராகி பணியாரம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
ragi paniyaram - 2026

கேழ்வரகு குழி பணியாரம்
தேவையான பொருட்கள்

• 1 கப் கேழ்வரகு
• 1/2 கப் உளுந்து
• 1 டீஸ்பூன் வெந்தயம்
• 1 வெங்காயம்
• 3 பச்சை மிளகாய்
• 1/2 டீஸ்பூன் கடுகு
• 1/2 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
• 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
சிறிது கறிவேப்பிலை
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு

செய்முறை

கேழ்வரகு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும்.
2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 – 6 மணி நேரம் புளிக்கவிடவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியை எண்ணெய் சூடாக்கி,கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும்.

குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றவேண்டும். இரு புறமும் வேகவிட்டு எடுத்தால். சுவையான கேழ்வரகு குழி பணியாரம் ரெடி .

இந்த குழி பணியாரத்தை குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். மேலும் இது நார்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பலகாரம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை

அனைவர்க்கும் ஏற்ற ஒரு ஊட்டசத்து கொண்ட உணவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.