ஆரோக்கிய சமையல்: குதிரைவாலி கஞ்சி!

Published:

kuthuravalli kantchi - 2026

குதிரைவாலி கஞ்சி
தேவையான பொருட்கள்

1 /4 கப் குதிரைவாலி அரிசி
10 பூண்டு
ஒரு துண்டு சுக்கு
1/4டீஸ்பூன் சீரகம்
1/4 டீஸ்பூன் வெந்தயம்
1 டம்ளர் தேங்காய்ப் பால்
தேவையான அளவு உப்பு

செய்முறை

சுத்தம் செய்த கால் கப் குதிரைவாலி அரிசியை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மண்சட்டியில் வேகவிடவும்.
பாதி வெந்ததும் உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம் சேர்த்து வேகவிடவும்.

நன்றாக வெந்ததும் தேவையான உப்பு ஒரு டம்ளர் தேங்காய்ப் பால் சேர்த்து’ கலக்கி இறக்கவும்.

சூடான அருமையான குதிரைவாலி கஞ்சி தயார். வயிற்றுப்புண், வாய்புண் ஆகியவை மறையும்.

Related articles

Recent articles

spot_img