
நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.
இந்த மாத்திரையை உட்கொள்வதால், தலைவலி, வயிற்றுப் போக்கு, ரத்தம் உறைதல், கண் பார்வை இழப்பு, கல்லீரல் பாதிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. இதனால், அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள், ‘நிமுசுலைடு’ மாத்திரையை, 2000ம் ஆண்டில் தடை செய்தன.
இந்தியாவில் இவ்வகை மாத்திரை பயன்பாட்டில் இருந்தாலும், 2011 முதல், 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு பரிந்துரைக்க, மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
இந்நிலையில், டெங்கு போன்ற தீவிர காய்ச்சல் பாதிப்பின் போது, காய்ச்சலை குறைக்கும் வகையில், ‘நிமுசுலைடு’ மாத்திரை, சிறார்களுக்கு பரிந்துரைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
குழந்தைகள், சிறார்களுக்கு, ‘நிமுசுலைடு’ மாத்திரை பரிந்துரை செய்யப்படுவதில்லை; அது குறித்த புகாரும் வரவில்லை. அவ்வாறு, 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு, ‘நிமுசுலைடு’ மாத்திரை பரிந்துரைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், டாக்டர் பரிந்துரையின்றி மருந்தகங்களில், ‘நிமுசுலைடு’ போன்ற எந்த வகை மருந்து, மாத்திரையும் வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது கண்டறியப்பட்டால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.