
ஓ.என்.ஜி.சி., எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 2,236 அப்ரென்டிஸ் காலியிடம் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 25.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி.,) என்பது மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில், அக்கவுண்ட் எக்ஸிக்யூட்டிவ், பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் எக்ஸிக்யூட்டிவ், ஃபயர் சேஃப்டி எக்ஸிக்யூடிவ், வெல்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு 2,236 அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி என்ன?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில், ITI, டிப்ளமோ, B.Sc, BE, B.Tech, BBA போன்ற பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக 18 வயது முதல், அதிகபட்சமாக 24 வயத்திற்குள் இருக்க வேண்டும்.
SC,ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்வது எப்படி?
மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஓஎன்ஜிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களையும் அதில் பார்த்து கொள்ளலாம்.