சரியான முறையில் ‘தயிர் சாதம்’ செய்வது எப்படி?

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

curd rice - 2026

இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் தயிர் சாதம் செய்கிறார்கள். ஆனால், சரியான முறையில் செய்வதில்லை. நான் சொல்வதை அப்படியே செய்தால்… நீங்கள் தயிர் சாதத்துக்கு அடிமையாகிவிடுவீர்கள்.

தேவையானவை: அரிசி – அரை டம்ளர், தண்ணீர் – 3 டம்ளர், தயிர் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், காய்ச்சிய பால் – ஒன்றரை டம்ளர், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குழைய வேக வைத்துக் கொள்ளுங்கள். இதில் காய்ச்சிய பாலை ஊற்றி, வெண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். இப்போது சாதம் திக்காக இல்லாமல் தளதளவென்று தண்ணீர் மாதிரி இருக்கும்.

இதனை ஆற வைத்து டிபன் பாக்ஸில் வைத்து மூடும் முன் தயிர் சேர்த்து நன்கு கிளறி மூடிவிடுங்கள். மதியம் பாக்ஸை திறக்கும்போது, தயிர் சாதம் புளிக்காமல், ஸ்மூத் அண்ட் டேஸ்ட்டியாக இருக்கும். இதற்கு தக்காளி தொக்கு… சூப்பர் சைட் டிஷ்!

– செஃப் தாமு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.