குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கற்பழிப்பு: மாடலிங் நடிகை பூஜா புகார்!

Pooja-Mishra-Photoshoot21 பாட்னா: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை எவரோ கற்பழித்துவிட்டதாகவும், தன் விலையுயர்ந்த பொருள்களை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டதாகவும் மாடலிங் நடிகை பூஜா மிஸ்ரா புகார் ஒன்றை அளித்துள்ளார். பீகாரைச் சேர்ந்த மாடல் நடிகை பூஜா மிஸ்ரா. இவர் பிக் ஸ்விட்ச், பிக் பாஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். பாலிவுட் படங்கள் சிலவற்றில் நடனம் ஆடியுள்ளார். கடந்த 2003ல் பாலிவுட் படமான தில் க ரிஷ்டா வில் சாஜன் சாஜன் என்ற பாடலில் ஆடி நடித்து புகழ்பெற்றார். பின்னர் கலர்ஸில் சல்மான் கான் நடத்திய ‘பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோ’மூலம் புகழ்பெற்றார். 2010ல் யுடிவி பிந்தாஸில் பெரிய ரியாலிடி ஷோவில் நடித்தார். பிகார் மாநிலம் முங்கரில் பிறந்த பூஜா, பி4யு டிவியில் ஜப் வி டாக் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். நட்பு, தாம்பத்யம் இவற்றில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக அமைந்த நிகழ்ச்சி இது. அண்மையில் இவர் காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றிற்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் செய்ன்றார். அங்கே உள்ளா ‘ராடிசன் ப்ளூ’ என்ற 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டுள்ளார். போட்டோ ஷூட் முடிந்த பின்னர் அவரை புகைப்படம் எடுத்த புகைப்படக்காரர் சென்றுவிட்ட நிலையில் ஹோட்டலில் தான் குடித்த குளிர் பானத்தில் யாரோ மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளதாகவும், அதைக் குடித்துவிட்டு அறைக்குச் சென்ற தான் மயங்கிவிட்டதாகவும் பூஜா தெரிவித்துள்ளார். காலையில் கண் விழித்தபோது தன்னை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துவிட்டது போன்று உணர்ந்ததாகவும், தனது நகை பணம் பொருட்கள் திருடப்பட்டுவிட்டதாகவும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து, போலீஸார் ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை யாரையும் அவர்கள் கைது செய்யவில்லை. இது குறித்து உத்ய்புர் ஐஜி ஆனந்த் ஸ்ரீவத்ஸவா கூறியபோது, அவர் மன அதிர்ச்சிக்குள்ளான நிலையில் பேசுகிறார். தெளிவான பேச்சு இல்லை. இருந்தாலும் ஒரு போலீஸ் அதிகாரியை நியமித்து, அவருடன் அனைத்து விவரங்களையும் கேட்டு விசாரிக்கவுள்ளோம் என்று கூறினார். இந்தச் சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, இதன்பின்னணியில் சோனாக்ஷி சின்ஹாவும், அவரது அம்மாவும் உள்ளனர் என்று பூஜா புகார் கூறியுள்ளார். sonakshisinha-poojamishra