ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு… போட்டியின்றி தேர்வான மன்மோகன் சிங்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

manmohansing - 2026
ஜெய்ப்பூர்: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ராஜஸ்தானில் இருந்து போட்டி யின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார்.

மற்ற கட்சிகளில் இருந்து எவரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், போட்டியிடாததால் அவர் வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மன்மோகன் சிங்குக்கு மாநில  முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னர் இங்கே மாநிலங்களவை  எம்.பியாக இருந்த மதன்லால் சைனீ காலமானதை அடுத்து  இங்கே மன்மோகன்சிங்  போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்குக்கு வயது 86. இவர்,  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.பி.,யாக இருந்துள்ளார்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.