புது தில்லி: வெள்ளிக்கிழமை இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வீட்டுக்கே சென்று, அவரிடம் பாரத ரத்னா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், வாஜ்பாய்க்கான பாரத ரத்னா விருது, இன்று வழங்கப்பட்டது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். எனவே, அவரது வீட்டுக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதை வழங்கினார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய்க்கு தங்களது வாழ்த்துகளை அவர்கள் தெரிவித்தனர். பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் வீட்டில் தில்லி சம்ஸ்க்ருத பள்ளி மாணவ மாணவிகளுடன் பிரதமர் மோடி சற்று நேரம் உரையாடி மகிழ்ந்தார். வந்தவர்களை வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா வரவேற்றார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசிக் கொண்டிருந்தார்.
வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்கினார் பிரணாப் முகர்ஜி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari