
கர்நாடகா மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கருக்கலைப்பின் போது உயிரிழக்கவே அவரை பெட்ரோல் ஊற்றி எரித்த்துள்ளார் அவரது காதலர்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஷிபராணி ஜெயபிரபு என்ற 22 வயது மாணவி பைன் ஆர்ட்ஸ் கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் ரவிக்குமார் என்ற இளைஞரை காதலித்துள்ளார். இவர்களின் காதல் நெருக்கத்தில் ஷிபராணி கர்ப்பமாகியுள்ளார். இதனை அடுத்து கருவைக் கலைக்க தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் போட்ட அதிக திறன் கொண்ட ஊசியால் ஷிபராணி உயிரிழந்துள்ளார். காதலி இறந்ததால் பீதியடைந்த காதலன் ஷிபராணி உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று தெலங்கானாவில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
இதையடுத்து ஷிபராணியின் பெற்றோர் அளித்த புகார் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெலங்கானாவில் உள்ள காட்டுப்பகுதியில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராணியின் காதலர் ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். ரவிக்குமாரின் தந்தை காவல்துறையில் பணிபுரிகிறார்.