
மகளிர் கல்விக்காகக் குரல் கொடுத்து நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் இளம்பெண் மலாலா தற்போது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் குரலை வெளிப்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் உலகின் கவனத்தைக் கவர்வதற்காக, தனக்கு ஏதோ காஷ்மீரில் அதிகம் நண்பர்கள் உள்ளது போலவும், அவர்களிடம் தாம் பேசியது போலவும், அப்போது அவர்கள் தங்களது சிரமங்களையும் மனித உரிமை மீறல்களையும் சொன்னது போலவும் டிவிட்டர் பதிவு வெளியிட்டிருந்தார் மலாலா.
அவரது பதிவுக்கு பலத்த எதிர்ப்புகளை கிளப்பி வருகின்றனர் டிவிட்டர் வாசிகள்! இது குறித்து மேஜர் கௌரவ் ஆர்ய தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்த கருத்தில், மலாலா தனது நோபல் பரிசு புகழை காஷ்மீருக்கு எதிராகப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார். பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றத்துக்கு உட்படுத்தப் பட்ட ஹிந்து, சீக்கிய பெண்கள் குறித்து எதுவும் பேசுவதில்லை ஏன் பலூச் குறித்து ஏன் எதுவும் பேசுவதில்லை! மலாலாவின் பேச்சும் அறிக்கையும் பாகிஸ்தான் ராணுவத்தை திருப்திப் படுத்த மட்டுமே அமைந்துள்ளது. அதன் மூலம் அவர் தன் நாட்டுக்கு திரும்ப முடியும்!
இப்படி பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.



