
பிரதமர் நரேந்திர மோடியை பாம்பு, முதலைகளை வைத்து கொல்லப்போகிறேன் என பாகிஸ்தான் பாடகி வெளியிட்ட வீடியோவைத் தொடந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்ஸாடா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுயிருந்தார். அந்த வீடியோவில் பாடகி ரபி பிர்ஸாடா கை நிறைய விஷ பாம்புகளை வைத்திருக்கிறார். அத்துடன் அவர் அமர்ந்து கொண்டிருக்கும் ஷோபாவில் சில மலைப்பாம்புகளும், ஒரு முதலையும் வைத்து பாட்டு பாடுகிறார்.https://dhinasari.com/world-news/104489-pakistani-pop-singer-threatened-to-unleash-snakes-on-prime-minister-modi-over-kashmir.html.
அந்த பாம்புகள், முதலைகளோடு விளையாடியபடி பேசிய பாடகி ர பிரிஸ்டா, ” நான் ஒரு காஷ்மீர் பெண் மணி, இந்தியாவுக்கு வர தயாராக உள்ளேன். நீங்கள் (மோடி) காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் இந்த பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. நரகத்தில் உயிரிழக்க தயாராக இருங்கள். என் நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள் என தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் குறித்து பாம்புகளை வைத்துக்கொண்டு ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.
இந்த வீடியோ வெளியானதை அடுத்து பாடகி ரபி பிர்ஸாடா மீது லாகூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.. பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, வீட்டில் மிருகங்களை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை ஜெயிலில் அடைத்துள்ளனர்.