சர்வதேச பேட்மின்டன் தரவரிசையில் உச்சம் பெற்றுள்ளார் சாய்னா நேவால். சர்வதேச அளவில் முதலிடம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.. தில்லியில் நடைபெற்றுவரும் இந்தியன் ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகித்துவந்த ஸ்பெயினின் கரோலினா மரின் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனிடம் தோற்றதால் இந்தியாவின் சாய்னா நேவாலுக்கு உலகத் தரவரிசையில் முதலிடம் வருவதற்கான புள்ளிகள் கிடைத்தன. இன்று நடைபெற்ற இந்தப் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் ஜப்பானின் யுயி ஹஷிமோட்டோவை எதிர்த்து சாய்னா விளையாடவுள்ளார். இந்தப் போட்டியில் சாய்னா வெற்றி பெறாவிட்டாலும்கூட உலகத் தர வரிசையில் முதலிடத்தை அவர் தக்க வைப்பார். இந்தியன் ஓபனில் சாய்னா அரையிறுதியை எட்டியிருப்பதும் இதுவே முதல் முறை. உலகத் தர வரிசையில் முதலிடம் வந்துள்ளது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய சாய்னா, தலைசிறந்த வீராங்கனையாகத் திகழவேண்டும் என்பதே தன் கனவு என்றும், முதலிடம் இரண்டாம் இடம் என்பதெல்லாம் தனக்கு அவ்வளவாக முக்கியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உச்சம் தொட்ட சாய்னா நேவால்: பேட்மின்டனில் முதலிடம் பெற்று சாதனை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari