
நண்பரின் திருமணத்துக்குச் சென்று திரும்பும் போது, சாகர் கால்வாயில் கார் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர். சாகர் கால்வாயில் இருந்து சனிக்கிழமை இன்று மதியம் காரை மீட்டெடுத்தார்கள். இதனால், சூரியாப்பேட்டை மாவட்டத்தை சோகம் ஆட்கொண்டது.
நடிகூடம் மண்டலம் ‘சாகிராலா’ அருகில் சாகர் கால்வாயில் கார் வேகமாக சென்று கவிழ்ந்தது. சனிக்கிழமை மதியம் காரை கால்வாயிலிருந்து என்டிஆரெஃப் சிப்பந்திகளும் போலீசாரும் வெளியில் எடுத்தார்கள். காரில் இருந்து ஆறு பேரின் உடல்கள் மீட்கப் பட்டன.
இந்த விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் ஹைதராபாத் டாக்டர் ஏஎஸ்ராவ் நகரில் உள்ள அங்கூர் ஹாஸ்பிடலில் பணிபுரிபவர்கள்.
தங்களுடன் பணிபுரியும் விமலகொண்ட மகேஷ் திருமணத்திற்காக சாகிரால என்ற இடத்திற்குச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இறந்தவர்கள் 6 பேரும் வெள்ளிக்கிழமை நேற்று காலை நண்பனின் திருமணத்திற்குச் சென்றவர்கள் என்பதுதான் சோகம்.
அவர்கள் திருமணத்துக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்த போது, சூர்யா பேட்டை அருகில் கார் வேகமாகச் சென்று கால்வாயில் விருட்டெனப் பாய்ந்துள்ளது. கால்வாயில் நீர் வரத்து மிக அதிகமாக இருந்ததால் உதவிப் பணிகள் தாமதமாகின. இந்நிலையில் மீட்புக் குழுவினர், சனிக்கிழமை இன்று மதியம் காரை வெளியே எடுத்தார்கள்!



