
தெலுங்கு சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக அறியப்படும் #கோகுல் சாய் கிருஷ்ணா டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தது அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை நட்சத்திரமான கோகுல் சாய் கிருஷ்ணா, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக வெளியான செய்தியைக் கேட்டு, பலரும் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்த சிறுவன் கோகுல் சாய் கிருஷ்ணா, ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டிராமா ஜூனியர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவைப் போலவே நடித்துக் காட்டி பார்வையாளர்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி நேயர்கள் அனைவரின் பாராட்டையும் பெற்றான்.
இந்நிலையில் கோகுல் சாய் கிருஷ்ணா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சித்தூரில் சிகிச்சை பெற்று வந்தான். இதனிடையே அவனது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மேல் சிகிச்சைக்காக அவனை பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோகுல்சாய் கிருஷ்ணா உயிரிழந்ததாகக் கூறப் படுகிறது.



