பட்டாசு வெடிக்கத்தான் இரக்கமே இல்லாம தடை போடுறாங்க… ‘ஸ்வீட் பாம்’க்காவது..?!

Published:

sweetbombs - 2026

ஸ்வீட் பாம்கள்… ஹாட் கேக் போல… இப்போது களைகட்டியிருக்கின்றன. தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்புகள்…பட்டாசுகள்…. கொண்டாட்டம்தான் நினைவுக்கு வரும்.

ஆனாலும் அனியாயத்துக்கு நம் சிறுவர்களின் இளைஞர்களின் மகிழ்ச்சியைக் கெடுப்பதற்காகவே நீதிமன்றமும் அரசுகளும் பட்டாசுக்கு கட்டுப்பாடு போட்டு இருப்பதால், இப்போது பட்டாசு பாணியில் ஸ்வீட்களை தயாரித்து வருகிறார்கள் இனிப்பு விற்பனையாளர்கள்.

இந்த தீபாவளிக்கு லட்டு, ஜிலேபி, குலோப்ஜாமுன் என்று அல்லாமல் சம்திங் ஸ்மார்ட்டாக வேண்டும் என்று கேட்பவர்களுக்கு ராஜஸ்தான் வியாபாரிகள் புது உத்தியை புகட்டியுள்ளார்கள். பண்டிகைகளில் கஸ்டமர்களை கவர்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

தீபாவளி வெடிகளை வடிவில் ஸ்வீட்ஸ் தயாரித்துள்ளார்கள். லட்சுமி வெடி, புஷ்வாணம், பூத்திரி, ஆட்டம் பாம்கள் வடிவில்…. கிராக்கர்ஸ் ரேஞ்சில் ஸ்வீட்ஸ் தயாரித்துள்ளார்கள். குழந்தைகள் இந்த இனிப்புகளைப் பார்த்து ஜோராக வாங்கிச் செல்கிறார்கள். ஹாட் கேக் போல விற்பனையாகிறது.

ஒருமாதம் முன்பிருந்தே இனிப்புகள் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஜோத்பூர் இனிப்பு வியாபாரிகள். சுத்தமான நெய் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ் சேர்ப்பதால் விரைவில் கெடுவதில்லை என்கிறார்கள்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img