
ஜெகனின் அடுத்த பரபரப்பு தீர்மானம்…வேலையில்லா இளைஞர்களுக்கான திட்டம் …
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பொறுப்பு ஏற்றுக் கொண்டதில் இருந்து பரபரப்பு தீர்மானங்களை எடுத்தபடி முன்னேற்ற பாதையில் முன்னுக்கு விரைவதாக அந்தக் கட்சியினர் பாராட்டி வருகின்றனர்.
புதிதாக வேலையில்லா இளைஞர்களுக்கு அற்புதமான திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்கின்றனர்.
வேலையற்ற இளைஞர்களுக்கு பொருளாதார தற்சார்பு ஏற்படுத்தும் திசையில் “ஒய்எஸ்ஆர் ஆதர்சம்” என்ற பெயரில் புத்தம்புது திட்டத்தை தொடங்கியுள்ளார் ஜெகன்.
மணல், தினசரி உபயோகப் பொருட்கள், மதுபாட்டில்கள்… இவற்றை எடுத்துச் சென்று சேர்க்கும் பொறுப்பை வேலையில்லா இளைஞர்களுக்கு ஒப்படைக்க போகிறது ஜகன் சர்க்கார்.
அதுமட்டுமின்றி அதற்கு தேவையான வாகன வசதிகளை அரசாங்கமே ஏற்படுத்தித் தரப்போகிறது. அதற்காக 6000 டிராக்டர்களை வாங்குவதற்கு அரசு நிதி வசதி அளிக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் எஸ்சி எஸ்டி பிசி மைனாரிட்டி காப்பு இன சமூகங்கள் பலன் பெறும் வாய்ப்பு உள்ளது.
அந்தந்த சமூகப் பிரிவுகளின் கார்ப்பரேஷன்கள் மூலம் நிதியுதவி வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த உள்ளது.
இது தொடர்பான வழி முறைகளையும் விதிகளையும் அரசாங்கம் செவ்வாய் அன்று வெளியிட்டது.
அதன்படி சமூகநலத்துறை செயலாளர் முத்தாட ரவிச்சந்திரா உத்தரவுகளை பிறப்பித்தார்.
முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு இத்திட்டத்தில் இடமில்லை . எஸ்சி , எஸ்டி, பிசி, மைனாரிட்டி, காப்பு, இன சமூக பிரிவுகளுக்கு மட்டுமே இத்திட்டம் செல்லும்படியாகும் வகையில் இதனை வடிவமைத்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆதாயம் பெற வாய்ப்புள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள மணல் ரீச் களிலிருந்து மணலை வாங்குபவரின் வீடு வரை மணலை சேர்க்கும் பொறுப்பு…., ஏபி பீவரேஜஸ் கார்ப்பரேஷன் கோடவுனிலிருந்து மது பாட்டில்களை அரசு கட்டுப்பாட்டில் உள்ள கடைகளுக்கு கொண்டு சேர்ப்பது… ரேஷன் வினியோக அமைப்பின் கிடங்குகளிலிருந்து அரிசி மற்றும் பிற தினசரித் தேவை சரக்குகளை மண்டல ஸ்தாயி பாயிண்ட் களுக்கு (எம்எஸ்எல் ) எடுத்துக் கொண்டு சேர்ப்பது ஆகிய வேலைகள் இளைஞர்களுக்கு கிடைக்கப் போகின்றன.
இந்தப் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான 6000 டிராக்டர்கள் வாங்குவதற்காக அரசு பொருள் உதவி அளிக்க உள்ளது.
இந்தத் திட்டத்தை கட்டுக்கோப்பாக செய்வதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் கமிட்டிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது.



