காஷ்மீரில் பிரதமர் மோடி: ராணுவ வீரர்களுடன் தீபாவளி!

Published:

modi sivaji - 2026

காஷ்மீரில் நரேந்திர மோடி!

பிரதமர் மோடி இன்று காஷ்மீர் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்.

கடந்த ஆண்டுகளிலும் அவர் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

நாட்டைக் காக்கும் பணியில் குடும்பத்தினரை விட்டு பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் நாட்டின் எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக தீபாவளியை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த ஆண்டும் எல்லையில் தீபாவளியைக் கொண்டாடும் வீரர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக காஷ்மீருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img