
மோடி பரபரப்பு முடிவு ஆர்சிஇபி க்கு இந்தியா நிராகரிப்பு. ஒப்பந்தத்தில் சேரப் போவதில்லை என்று தீர்மானம்.
இந்தியாவின் நலனோடு சமரசம் செய்து கொள்வதற்கு இடமில்லை என்று முடிவாக கூறிவிட்டார் பிரதமர் .
உலகிலேயே மிகப் பெரியதாக கருதப்படும் ரீஜனல் கம்ப்ரிஹென்சிவ் எகனாமிக் பார்ட்னர்ஷிப் (RCEP) ஒப்பந்தத்தில் சேருவதற்கு பாரதம் நிராகரித்துள்ளது.
ஆர்சிஇபி ஒப்பந்தத்தின் அடிப்படை குணம் மாறி விட்டது என்றும் இந்த ஒப்பந்தம் விஷயத்தில் இந்தியா வெளிப்படுத்திய மறுப்புகள் கண்டுகொள்ளப் படவில்லை என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அதனால் ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் சேர வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது பாரதம்.
இந்தியாவின் நலன் விஷயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி திட முடிவோடு உள்ளார்.
அதுமட்டுமன்றி ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா தெரிவித்த முக்கிய அம்சங்களைப் பற்றி எதுவும் கூறப் படாததால் இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது.
இந்தியாவிற்குள் சைனாவின் இறக்குமதிகள் வந்து குவிகின்ற பின்னணியில் இந்தியா இந்த ஒப்பந்தத்தில் பல மறுப்புகளை வெளிப்படுத்தியது. சில புதிய கோரிக்கைகளை எடுத்து நிறுத்தியது.
உண்மையில் பாங்காக்கில் நடந்த ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் ஆர்சிஇபி ஒப்பந்தம் முடிவாக வேண்டும்.
ஆனால் இந்தியா ஒப்புக் கொள்ளாததால் இந்த ஒப்பந்தம் 2020 க்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக தோன்றுகிறது.
இந்தியாவோடு சேர்ந்து சைனா ஜப்பான் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற 16 நாடுகள் இடையே ஆர்சிஇபி ஒப்பந்தம் நிகழ வேண்டியுள்ளது.
உலகின் பாதி மக்கள் தொகை இந்த நாடுகளிலேயே உள்ளது . ஆர்சிஇபி மீது கையெழுத்திடுவதற்கு மீதி நாடுகள் கட்டுப்பட்டு உள்ளன. ஆனால் இந்தியா மட்டுமே மறுப்பு தெரிவித்துள்ளது.
சைனாவின் மலிவான பொருட்களின் குவிதலால் சிறு வியாபாரிகளின் நிலைமை அடிபட்டு உள்ளது என்று பிரதமர் மோடி ஏற்கனவே ஆர்சிஇபி ஒப்பந்தத்தின் மீது மறைமுகமாக கவலை தெரிவித்துள்ளார்.