
ஐந்தாண்டுகளில் 27 இளைஞர்களை வலையில் சிக்க வைத்த பெண் வக்கில் போலீசில் சிக்கினார்.
திருமணமாகாத இளைஞர்களை தனது மயக்கும் பேச்சால் வசப்படுத்தி அவர்களிடம் நட்பாக பழகி வீடியோ எடுத்து அச்சுறுத்தும் கில்லாடி பெண்ணை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.
முதலில் மயக்குவது, நெருங்கி பழகுவது, சிறிது நாட்களில் என் மீது பலாத்கார முயற்சி செய்தான் என்று பிளாக் மெயில் செய்வது, அவர்கள் மீது பொய் வழக்கு போடுவது… இப்படிச் செய்த பெண் பற்றி போலீசார் ஊடகங்களிடம் இன்று விவரித்தனர்.
‘மலக்பெட்’ பகுதியைச் சேர்ந்த ஷதான் சுல்தானா (27) வழக்கறிஞராக பணி புரிகிறார். இவருக்கு ‘அபிட்ஸ்’3 பகுதியில் உள்ள சிறுபான்மையினர் நலத் துறையில் வேலை செய்துவரும் காண்ட்ராக்டர் ரெக்கார்டு உதவியாளர் ரஹீமோடு 2015ல் பழக்கம் ஏற்பட்டு நட்போடு பழகிய இருவரும் நெருங்கி பழகி வீடியோ எடுத்துக் கொண்டனர்!
பின்னர் அவரை பிளாக்மெயில் செய்து அந்தப் பெண் அச்சுறுத்தியதால் அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு மூணு லட்சம் ரூபாய் செலுத்தினார் ரஹீம். மீண்டும் 5 லட்சம் வேண்டும் என்று அச்சுறுத்தவே ரஹீம் அக்டோபர் 19 அன்று தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார்.
இந்தச் சம்பவம் பற்றிய செய்தி அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று ரஹீமிடம் வாக்குமூலம் பதிவு செய்தபோது குற்றவாளி ஷதான் சுல்தானாவின் ’குற்றப் பரம்பரை’ வெளிச்சத்துக்கு வந்தது.
சுல்தானா 2014 முதல் காதல் நாடகம் நடத்தி, மொத்தம் 27 பேரை இதே போல் ஏமாற்றியது தெரிய வந்தது.
இதை அடுத்து அவர்மீது பாதிக்கப் பட்ட அனைவரும் தற்போது புகார் கொடுக்கவே, சுல்தானா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



